பேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு

1
52

பேரா ஏப் 27,

பேரா மாநில ரீதியிலான வளர்தமிழ் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் லாருட் மாத்தாங் மாவட்ட தமிழ் பள்ளிகள் இரண்டாவது முறையாக அதிகமான பரிசுகளை குவித்தன.

பேரா மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள் இந்தப் போட்டியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

 

திருக்குறள் மனனப் போட்டி ,கதை சொல்லுதல் ,பேச்சுப் போட்டி ,கவிதை கூறுவது, மேடை போட்டி, பாடல் புதிர், மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பேரா மாநில கல்வித் திணைக்களமும் பேரா தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கமும் இணைந்து வடக்கிந்தா மாவட்ட தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போட்டியை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

கட்டுரைப் போட்டியில் மஞ்சோங்கைச் சேர்ந்த மாணவர் பிரவீன் முதல் பரிசைப் பெற்றார். இரண்டாவது பரிசை பாகான் டத்தோ மித்திரன் பெற்றார்.
பேச்சுப் போட்டியில் லாருட் மாத்தாங்கை சேர்ந்த வேணி முதல் பரிசையும் மஞ்சோங்கை சேர்ந்த பணிமுகில் இரண்டாவது பரிசையும் பெற்றனர் .

 

கவிதைப் போட்டியில் வடகிந்தாவைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் முதல் பரிசைப் வென்றார். பத்தாங் பாடாங் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரன் இரண்டாவது பரிசை பெற்றார்.

இவர்கள் அனைவரும் தேசிய நிலையில் நடைபெறும் வளர்தமிழ் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என வட கிந்தா மாவட்ட தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவனேசன் பிரதிநிதியாக அவரது சிறப்பு அதிகாரி முத்துசாமி கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரா தமிழ் மொழி உதவி இயக்குனர் சந்திரசேகரன் கலந்துகொண்டு உரையாற்றினார். இத்தகைய போட்டி நிகழ்ச்சிகள் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு பெரும் துணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வளர்தமிழ் விழாவிற்கு ஆதரவை வழங்கிய ஆட்சிக்குழு உறுப்பினர் சிவனேசன் மற்றும் இந்த விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பெரும்பங்காற்றிய தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் அவர் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக நேரங்காலம் பார்க்காமல் ,சமுதாய நோக்கத்தோடு சேவையாற்றி வரும் தமிழ் பள்ளிகளின் ஆசிரியர்கள் , தலைமையாசிரியர்கள் மற்றும் இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கு தங்களது பிள்ளைகளை கலந்து கொள்வதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய பெற்றோர்களுக்கும் முத்துசாமி தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

1 COMMENT

  1. வணக்கம். விரைவாக செய்தியை தொகுத்து போட்டுவிட்டீர்கள். நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சின்ன மாற்றம். லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம் தொடச்சியாக 3 முறை வெற்றிப் பெற்றது என்பது தான் உண்மை. திருத்திக்கொண்டால் மகிழ்ச்சி அடைவோம். மற்றொன்று சுழல் கின்னத்தை வென்ற படத்தை இணத்திருந்தால் சிறப்பாக இருக்கும். வளர்க உங்கள் தமிழ் பணி.

    ப. நாகராஜா
    செயலாளர்,
    லாருட் மாத்தாங் செலாமா
    தலைமையாசிரியர் கழகம்

Comments are closed.