புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆசிய இளையோர் கராத்தே போட்டி; எஸ்.சூர்யா மலேசியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்தார்
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஆசிய இளையோர் கராத்தே போட்டி; எஸ்.சூர்யா மலேசியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்தார்

கோத்தா கினபாலு, ஏப்ரல் 27-

கோத்தா கினபாலுவில் நடைபெற்ற ஆசிய இளையோர் கராத்தே போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார் இளம் கராத்தே வீரரான எஸ் சூர்யா.

கோலாலம்பூரை சேர்ந்த 17 வயதுடைய சூர்யா இறுதிச் சுற்றில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் எளிதாக கஸகஸ்தானின்  சைட்  அக்ஹாடோவை 11-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

வெண்கலப் பதக்கத்தை பெறுவதில் நமது கராத்தே வீரர்கள் தோல்வி கண்டு வெளியேறிய கடுமையான நெருக்கடிக்கு இடையே சூர்யா தங்கப்பதக்கத்தை வாகை சூடி மலேசியாவுக்கு பெருமையை தேடித் தந்தார்.

பி.கிரிஜைஸ்வரன் தமது இளைய சகோதரரே பின்பற்றி வெண்கலப் பதக்கத்தை  பெற்றார். ஆண்களுக்கான கத்தா பிரிவில் மலேசியா மேலும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இதனிடையே தமது இந்த வெற்றிச்க்கு எல்லா வகையிலும் துணையாக இருந்த தேசிய கராத்தே பயிற்சியாளர்  அலி ரைசா சோழமணிக்கு சூர்யா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன