செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புகைப்பிடிப்பதும் உடல் பருமனும் தொற்றா நோய்க்கு காரணங்கள் -துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

புகைப்பிடிப்பதும் உடல் பருமனும் தொற்றா நோய்க்கு காரணங்கள் -துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய்

மூவார், ஏப் 28

புகைப்பிடிப்பதும் உடல் பருமனும் தொற்றா நோய்க்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

மலேசியாவில் என்.சி.டி எனப்படும் தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் ஆய்வின் மூலம் 2015ஆம் ஆண்டில் பெரியோர்களின் எடை 8.3லிருந்து 17.5 விழுக்காடு அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

இதே ஆண்டு காலத்தில் ரத்த அழுத்தம் தொடர்ந்து 30 விழுக்காடாக இருந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு 8.3 விழுக்காடாக இருந்த பெரியோர்களின் உடல் எடை 2015 ஆம் ஆண்டு 17.5 விழுக்காடு அதிகரித்தது என அவர் சொன்னார்.

பெரியோர்களின் புகை பிடிக்கும்  பழக்கம் தொடர்ந்து 22 விழுக்காடாக இருந்து வருகிறது. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு கம்போங் கூ  (சுகாதார கிராமங்கள் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தி தாகவும் டெல்லி டாக்டர் லீ பூன் சாய்   கூறினார்.

பெரியோர்களின் புகை பிடிக்கும் பழக்கம் தொடர்ந்து 22 விழுக்காடாக இருந்துவருகிறது. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு கம்போங் கூ திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக டாக்டர்  லீ பூன் சாய்  கூறினார்.

ஜோகூரில் மாநில அளவிலான இத்திட்டத்தை ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஷஹாருடின் ஜமால் பாகோ விளையாட்டு தொகுதியில் தொடக்கி வைத்தார்.

இவ்வாண்டின் தொடக்கத்தில் லங்காவியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.  தொற்றா நோய்களை எதிர்நோக்கும் வாய்ப்புகளை கொண்ட 63 விழுக்காட்டினர் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நோய்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கு  மக்கள் இணைந்து  பங்கேற்கும் திட்டங்கள்  நல்ல  பயனைக் கொண்டு வர முடியும். இத்தகைய திட்டங்கள் அவசியம் தேவை என அவர் டாக்டர் லீ பூன் சாய் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன