செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பேரா மாநில இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு; டத்தோ அமாலுடின் இஸ்மாயில் தொடக்கி வைத்தார்
சமூகம்முதன்மைச் செய்திகள்

பேரா மாநில இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு; டத்தோ அமாலுடின் இஸ்மாயில் தொடக்கி வைத்தார்

ஈப்போ ஏப் 28-

பேரா மாநில இஸ்லாமிய தமிழ் இலக்கிய  மாநாட்டை கொடை நெஞ்சரும் நகைக்கடை உரிமையாளரும் ஈப்போ இந்திய முஸ்லீம் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசகருமான நன்னெஞ்சர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் தொடக்கி வைத்தார்.

காலமாற்றத்தில் நவீனமயமான பல்வேறு வசதிகளை நாம் அனுபவித்தாலும் நம் இனத்தின்  அடையாளமாக திகழும் தாய்மொழியான தமிழ் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்முடன் இறுதிவரை பயணிக்கிறது. நமது தாய் மொழியில் படைக்கப்பட்ட பல அற்புதமான இலக்கியங்கள் தமிழ் இஸ்லாமிய இலக்கியத்திற்கு சிறப்பையும் மாண்பையும் ஏற்படுத்தியிருப்பதாக  இந்த மாநாட்டை தொடங்கி வைத்து  வாழ்த்துரை வழங்கிய போது டத்தோ அமாலுடின் தெரிவித்தார்.

ஈப்போ மாநகரில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாடு எல்லா வகையிலும் சிறப்பாக நடைபெறுவதற்கு கடுமையாக பாடுபட்ட ஏற்பாட்டாளரும் பத்திரிக்கையாளருமான முகமது அலி மற்றும் இதர நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் இந்த வேலையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் இஸ்லாமிய இலக்கியவாதிகளின் இலக்கிய உரைகள் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என அமாலுதீன் கூறினார்.

இஸ்லாமும் இன்பத் தமிழும் என்ற தலைப்பில் கம்பம் பீர் முஹம்மது ஆற்றிய உரையும்,மலேசியாவில் தமிழ் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் நாடறிந்த மூத்த எழுத்தாளர் சை.பீர் முஹம்மது அவர்களும், தமிழ் முஸ்லீம் புலவர்கள் என்ற தலைப்பில் இமாம் முஹம்மது இட்ரிஸ் அவர்களும் ஆற்றிய உரை மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பலத்த பாராட்டை பெற்றதோடு செவிக்கு நல்லதொரு விருந்தாகவும் அமைந்தது.மேலும் மலேசியத் தமிழ் நாளேடுகளில் தமிழ் முஸ்லீம்கள் என்ற தலைப்பில் செய்தியாளர் முஹம்மது அலி படைத்த கட்டுரையும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தன.

உலகில் தாய்மொழி மறந்த எந்த சமூகமும் அடையாளத்தோடும் சுயமரியாதையோடும் வாழ முடியாது மலேசியாவில் ஒரு காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக தமிழ் மொழியில் பயன்படுத்தி வந்தனர் இன்று காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிப்பதாக மாநாட்டுத் தலைவர்  முகமது அலி தெரிவித்த கருத்தையும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் வரவேற்றனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன