சிவபாலன்  உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது!

ஈப்போ,  ஏப்ரல் 30-

ஒவ்வோர் ஆண்டும் கல்வித் துறையில் சிறப்பான சேவையை வழங்கும் ஆசிரியர்களுக்கு அவர்கள் சார்ந்த மாவட்டக் கல்வி இலாகா நற்சேவையாளர் விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம்.

நாடு தழுவிய அளவில் இந்த நற்சேவையாளர் விருதளிப்பு விழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மலேசியாவிலேயே அதிகமான தமிழ்ப்பள்ளிகளைக் கொண்ட பேரா மாநிலத்தைச் சார்ந்த இளம் தமிழாசிரியர்கள் சிலர் கடந்தாண்டு நனிச்சிறந்த கல்விச் சேவையைப் பதிவு செய்து இவ்வாண்டு இந்த விருதைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

ஆசிரியர் சிவபாலன் திருச்செல்வம்
(இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்)

ஆசிரியர் நரேஸ் தேவதாஸ்
(குருயிட் தமிழ்ப்பள்ளி, சுங்காய்)

ஆசிரியர் செல்வா இலெட்சுமணன்
(சப்ராங் தமிழ்ப்பள்ளி, தெலுக் இந்தான்)

ஆசிரியர் நாகேன்ராஜ் நாராயணன்
(துரோலாக் தமிழ்ப்பள்ளி, துரோலாக்)

ஆசிரியர் பிரகலாதன் பாலசந்திரன்
(ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, பகான் செராய்)

இவர்கள் மட்டுமன்றி நாடு தழுவிய அளவில் பல தமிழ்ப்பள்ளி, தேசியப்பள்ளி, இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களும் இவ்விருதினைப் பெற்றுச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். கல்வித்துறைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்பணித்துக் கொள்ளும் இந்தத் தியாக உள்ளம் கொண்ட ஆசிரியப் பெருந்தகைகள் தொடர்ந்து நாட்டிற்கும், சமூகத்திற்கும், மொழிக்கும் தங்களின் நற்சேவையை வழங்க அநேகன்.காம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.