புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அரசியல் உளவு தகவல்களுக்காக நஜீப் 25லட்சம் வெள்ளி வழங்கினார்! – ஹபிபுல் ரஹ்மான் சாட்சியம்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அரசியல் உளவு தகவல்களுக்காக நஜீப் 25லட்சம் வெள்ளி வழங்கினார்! – ஹபிபுல் ரஹ்மான் சாட்சியம்

கோலாலம்பூர் ஏப்ரல் 30-

உளவு தகவல்களை பெறுவதற்காக தமக்கு அறிமுகமான நெருக்கமான ஒருவருக்கு 25 லட்சம் வெள்ளியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கொடுத்ததாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தேசிய முன்னணியின் அரசியல் நன்மைக்காக இந்த பணம் வழங்கப்பட்டதாக ஹபிபுல் ரஹ்மான் என்ற சாட்சி தெரிவித்தார்.

வழக்கறிஞர் நிறுவனம் மூலம் இந்த பணம் காசோலையாக வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். அரசியல் உறவு மற்றும் அரசியல் தரப்பைச் சேர்ந்தவர்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இப்பணம் பயன்படுத்தப்பட்டதாக எச். கே .எஸ் எனப்படும் அரசியல் வியூகம் மற்றும் ஆலோசனை சேவை நிறுவனத்தின் உரிமையாளருமான ஹபிபுல் தெரிவித்தார்.

உங்களிடம் கொடுக்காமல் வழக்கறிஞர் நிறுவனம் மூலமாக இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று டி பி பி முகமட் சைபுல்லா வினவினார். எனது பெயரில் வழங்கப்பட்டால் இது எனது வருமானமாக இருக்கும் . அதனால் தான் தாமே பணத்தை வழக்கறிஞர் மூலமாக வழங்கும்படி கேட்டுக் கொண்டதாக அந்த கேள்விக்கு ஹபிபுல் மறுமொழி தெரிவித்தார்.

எனது நோக்கத்திற்காக இப்பணம் பெறவில்லை அரசியல் தற்காப்பு செயல் நடவடிக்கைக்காக இப்பணம் பெறப்பட்டது. அரசியல் உளவுத் தகவல்களை பெறுவதற்காக தான் பணம் பெறப்பட்டது என்றார் அவர்.

பணம் பெறுபவரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அரசியல் நடவடிக்கைக்காக அந்த பணம் வழங்கப்பட்டது. சிலவேளைகளில் எனது சொந்த பணத்தையும் நான் பயன்படுத்த வேண்டியிருந்தது. எனவே இப்பணத்தில் ஒரு பகுதியை நான் எடுத்துக்கொண்டேன் என்றும் ஹபிபுல் தெரிவித்தார்.

தனது கட்சிக்காரருக்காக 25 லட்சம் வெள்ளியை பெற்றதாக ஹபுபுலின் வழக்கறிஞரான அஸ்ராப் அப்துல் ரசாக் புதன்கிழமை சாட்சியமளித்த போது கூறியிருந்தார். அதுபோல் ஹபிபுல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் கட்டணத்தை செலுத்தும் படி பணிக்கப்பட்டதாகவும் அஷ்ராப் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் உளவுத் தகவல்களை பெறுவதற்காக தாம் சில வேலைகள் சொந்தப் பணத்தை தாம் பயன்படுத்தியதால் அந்தப் பணம் திரும்ப தனது குடும்பத்தினருக்காக பகிர்ந்து அளிக்க பகிர்ந்து அளிக்கப்பட்டதாக ஹபிபுல் விளக்கம் அளித்தார் அந்த 25 லட்சம் வெள்ளி தற்காப்பு குத்தகையை நோக்கத்திற்காக வழங்கப்பட்ட தொகை என அஸ்ரப் தவறாக கூறியதாகவும் ஹபிபுல் கூறினார்.

அம்னோவின் அனைத்துத் தலைவர்களுமே கட்சி பணத்தை பயன்படுத்துவார்களா என நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி எழுப்பிய கேள்விக்கு ஆமாம் என ஹபிபுல் பதில் அளித்தார். இந்த பணம் தொடர்பாக நஜிப்பிடம் கேள்வி கேட்டீர்களா என்று வினவப்பட்ட மற்றொரு கேள்விக்கு இது அரசியல் ரீதியாக இருக்கும் என தாம் நம்பியதாக அவர் தெரிவித்தார்.

எஸ் ஆர் சி இன்டர்நேஷனல் சென் பெர்ஹாட் தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியம் வழங்கியபோது ஹபிபுல் இத்தகவலை வெளியிட்டார் . எஸ். ஆர். சி இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட்டிற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளி முறைகேடு தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளை நஜீப் எதிர்நோக்கியுள்ளார். வழக்கு விசாரணை தொடரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன