கோலாலம்பூர், ஏப்ரல் 30-

நம் வாழ்க்கை முறை மாற குப்பைகளின் அளவும் கணிசமாக அதிகரித்தே வருகின்றது. மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றபடாமல், வீதியோரம் ஆங்காங்கே குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன.

‘யாயாசன் ஏரா சூரியா’, ‘MyReturns’ செயலி மற்றும் செந்தோசா சட்டமன்றத்துடன் இணைந்து கடந்த சனிக்கிழமை 27-ஆம் தேதி ராகா வானொலி நிலையம் ‘Clean & Green’ எனும் துப்புரவு பணியை கிள்ளான் செந்தோசாவில் மேற்கொண்டனர்.

செந்தோசாவில் பரவலாக காணப்படும் குப்பை பிரச்சினைக்கு, இதுவரை எந்தவொரு தேர்வும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. இப்பிரச்சினைக்குத் தேர்வு காணவும் வகையிலும் இயற்கை அன்னையைப் பாதுகாக்கவும் ராகாவின் அறிவிப்பாளர்கள் சுரேஷ், அகிலா மற்றும் கோகுலன் செந்தோசா வட்டார மக்களுடன் இணைந்து இந்தத் துப்புரவு பணியில் கலந்துக் கொண்டனர். இவர்களுடன் நம் உள்ளூர் பாடகி புனிதா ராஜாவும் கலந்து ஆதரவு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் சிறப்பு வருகைப் புரிந்து துப்புரவு பணியில் கலந்துக் கொண்ட அனைவரையும் பாராட்டி தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

காலை 8.00 மணியளவில் தொடங்கிய இந்தத் துப்புரவு பணி, சுமார் 4 மணி நேரத்திற்கு சாலையோரங்களிலும் கால்வாயில்களிலும் வீசப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி அவ்விடத்தைத் தூய்மைப்படுத்தினார்கள்.