புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > உலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை!
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை!

சுங்கைப்பட்டாணி, ஏப்ரல் 30-

29 – 30 ஏப்ரல் – வட மலேசியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று முடிந்த உலகளாவிய புத்தாக்க ஆய்வு, உருவாக்கம் மற்றும் செயலிகள் கண்காட்சியில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் தேசிய வகை சப்ராங் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த செல்வா இலெட்சுமணன், முனிதா துலுக்கானம், கவித்திரா வாசுதேவன் மற்றும் தேசிய வகை சுங்கை குருயிட் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த நரேஸ் தேவதாஸ் இப்போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.

மேலும், MYRIS (Persatuan penyelidikan Dan inovasi malaysia) என்றழைக்கப்படும் மலேசியர் ஆய்வு மற்றும் புத்தாக்கக் கழகத்தின் சிறப்பு விருதையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி, இப்போட்டியில் தேசிய வகை நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த சித்திரமதி மாணிக்கம் மற்றும் கஸ்தூரி வீரையா எனும் ஆசிரியர்களும் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களான இந்த இரண்டு குழுக்களும் முதல் ஐந்து இடத்தைப் பெற்றது பெருமைக்குரியதாகும். இவர்களின் சாதனை தொடர அநேகன் தமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன