அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > நச்சு மதுபானம் அருந்திய  இருவர் பலி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நச்சு மதுபானம் அருந்திய  இருவர் பலி

ஈப்போ.மே 1.

பேரா கிந்தா மாவட்டத்தில் நச்சுக் குள்ளான மதுபானம் அருந்திய இரு வெளிநாட்டவர் மாண்டனர் .

ஒரு வங்காள தேசியும், மியன்மார் ஆடவரும் திங்கட்கிழமை ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பேரா சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் டிங் லே மிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

நச்சு கலந்த மதுவை அருந்திய பின்னர் அந்த இருவரும் வயிற்று வலி, வாந்தி,பார்வை மங்கி சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர்கள் இன்று காலையில் மரணமடைந்ததாக டாக்டர்  டிங் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன