புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசிய தெலுங்கு சங்கத்தின் சிம்பாங் அம்பாட் கிளை ஏற்பாட்டில் நடைப்பயணம் மற்றும் மருத்துவ முகாம் !
முதன்மைச் செய்திகள்

மலேசிய தெலுங்கு சங்கத்தின் சிம்பாங் அம்பாட் கிளை ஏற்பாட்டில் நடைப்பயணம் மற்றும் மருத்துவ முகாம் !

ஊத்தான் மெலிந்தாங், மே 2 –

உறுப்பினர்களின் நலன் கருதி அவர்களுக்காக அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயனான திட்டங்கள் ஒருநாள் வெற்றி பெறும் என்று  மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஊத்தான் மெலிந்தாங்,  சிம்பாங் அம்பாட் கிளையினர் உறுதியாக நம்புகின்றனர்.

அந்த வகையில் இவ்வாண்டும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அதற்கு நடைப்பயணம் அவசியம் என்பதையும் தங்கள் உறுப்பினர்களுக்கு உணர்த்தி வருகின்றனர்.

மலேசிய தெலுங்கு சங்க மண்டபத்தில் கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தங்கள் நடைப்பயணத்தை ஒரு கி.மீ. தொலைவிலுள்ள தீயணைப்பு நிலையத்தை நோக்கி ஆரம்பித்தனர்.

திரும்பி வந்து மண்டபத்தில் தெலுக் இந்தான் அன்சன் பே நிபுணுத்துவ மருத்துவ மையத்தினரின் மருத்துவ முகாமில் பங்கேற்று தங்களைச் சோதித்துக் கொண்டும் இரத்ததானம் வழங்கியும் சிறப்பித்தனர்.

அங்கு மருத்துவர்கள் வழங்கிய நோய்க் குறித்த உரைகளையும் கேட்டு் பயனடைந்தனர். மலேசிய தெலுங்கு சங்க தேசிய உதவித் தலைவர் திரு. டாக்டர் பிரதாப் இந்நிகழ்வைத் திறந்து வைத்தார். கிளைத் தலைவர் திரு. அப்பண்ணா தலைமையிலான குழுவினர் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன