சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’

0
5

சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சியாக ‘கலைச்சரம் 2019’ எனும் மாபெரும் கலை நிகழ்ச்சி ஒன்று வரும் மே மாதம் 11-ஆம் தேதி, அப்பல்கலைக்கழகத்தின் பங்கோங் பெர்சுபான் எனும் மண்டபத்தில் மாலை மணி 6.00க்கு நடைபெறவிருக்கின்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் அதேநேரத்தில், இந்நிகழ்ச்சியின் மூலம் அங்கு பயின்ற முன்னாள் மாணவர்களை ஒன்றுக்கூட வைக்கும் முயற்சியாகவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதோடு, இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களது நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனுமான உறவை மேலும் மேம்படுத்திக்கொள்ளவும் இந்நிகழ்ச்சி உதவும்.

பல அற்புதமான படைப்புகளைக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால் இதற்கு கலைச்சரம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. பல கண்கவர் நடனங்களும், பாடல்களும், மாய வித்தைகளும் இதில் இடம்பெறவுள்ளன.

அதோடு, கடந்த ஆண்டு நடைபெற்ற வானவில் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய அன்பழகன் சிறப்பு விருந்தினராக இதில் கலந்து கொள்ளவிருக்கின்றார். அவருடன் சேர்ந்து அப்போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட சக போட்டியாளர்களும் வருகை தரவுள்ளனர். இந்நிக்ழ்ச்சி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தஞ்சோங் மாலிம் வட்டார மக்களுக்காகவும் நடத்தப்படுகின்றது. ஆகவே, பொது மக்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும்படி ஏற்பாட்டுக்குழுவினர் அன்போடு கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.