செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தேசிய போலீஸ் படைத் தலைவர் பதவியை ஒப்படைத்தார் ஃபுசி ஹரூண் !
முதன்மைச் செய்திகள்

தேசிய போலீஸ் படைத் தலைவர் பதவியை ஒப்படைத்தார் ஃபுசி ஹரூண் !

கோலாலம்பூர், மே.3-

தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ஃபுசி ஹரூண் இன்று காலை அதிகாரபூர்வமாக தமது பதவியை, புதிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹமிட் பாடோரிடம் ஒப்படைத்தார். உள்துறை அமைச்சர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் முன்னிலையில் இந்த பதவி ஒப்படைப்பு சடங்கு நடைபெற்றது.

நாளைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் ஹமிட் பாடோர் தேசிய போலீஸ் படைத் தலைவராக பொறுப்பு வகிப்பார்.  பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் ஆலோசனையின் அடிப்படையில் அவரின் பதவி நியமனத்துக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தாபா பில்லா ஷா அனுமதி வழங்கியுள்ளார்.

அதேவேளையில் புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் துணை இயக்குனர் ரம்லி ஹசான், சிறப்பு பிரிவின் இடைக்கால இயக்குனராக பொறுப்பேற்கவிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன