ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி : மகளிருக்குக் கிடைத்த அங்ககீகாரம் -அமைச்சர் ஜூரைடா புகழாரம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி : மகளிருக்குக் கிடைத்த அங்ககீகாரம் -அமைச்சர் ஜூரைடா புகழாரம்

புத்ரா ஜெயா, மே 3-

நாட்டின் தலைமை நீதிபதியாக டத்தோ தெங்கு மைமுன் துவான் மாட் நியமிக்கப்பட்டிருப்பதானது மலேசிய மகளிருக்கு அளிக்கப்பட்ட ஓர் அங்கீகாரமாகும். அதே வேளையில், நாட்டில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பதவிகளில் மகளிரின் பங்களிப்பை இது உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசிய வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண்மணியை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செயததன் மூலம் மகளிரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் அரசாங்கத்தின் கடப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் கூறினார்.

நீதித் துறையில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ள தெங்கு மைமுன், தமது பணியை நம்பிக்கையுடனும் நேர்மையாகவும் முன்னேற்றமான முறையிலும் செம்மையாக நிறைவேற்றுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தெங்கு மைமுனுக்கு தமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டதோடு வழங்கப்பட்டுள்ள பணியை திறம்பட மேற்கொண்டு  நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் இவர் சேவையாற்ற வேண்டும் என்று தமது வாழ்த்து செய்தியில் ஹாஜா ஜூரைடா கமாருடின் கேட்டுக் கொண்டார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன