அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சூப்பர் லீக் கால்பந்து போட்டி; பி.ஜே சிட்டி பகாங் குழுவை வீழ்த்தியது
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சூப்பர் லீக் கால்பந்து போட்டி; பி.ஜே சிட்டி பகாங் குழுவை வீழ்த்தியது

பெட்டாலிங் ஜெயா, மே 5-

சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்றிரவு எம்.பி.பி.ஜே விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பி.ஜே சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் பகாங் குழுவை வென்று மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் புள்ளிப் பட்டியலில் பி.ஜே சிட்டி தற்போது 11 புள்ளிகளை பெற்று 9ஆவது இடத்தில் இருந்து வருகிறது.

புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து வரும் பகாங் குழுவை பி.ஜே சிட்டி அணி வீழ்த்தியிருப்பது மிகப்பெரிய வெற்றி என்பதோடு தமது ஆட்டக்காரர்களுக்கு இது நல்லதொரு உற்சாகத்தை தந்திருப்பதாக பி.ஜே சிட்டி குழுவின் பயிற்சியாளர் தேவன் வருணித்தார்.

இந்த ஆட்டத்தின் முடிவு தமக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக செய்தியாளர்களிடம்  பேசிய பகாங் குழுவின்  பயிற்சியாளர் டோலா சாலே தெரிவித்தார். பல அற்புதமான வாய்ப்புகள் கிடைத்தும் அதனை தமது ஆட்டக்காரர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என டோலா சாலே சுட்டிக்காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன