‘சீன மண்ணில் ஞான சைமன்’ நூல் வெளியீட்டு விழா

0
4

கோலாலம்பூர், மே 5-

சீன மண்ணில் ஞான சைமன் என்ற நூல்  வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை மே 11ஆம் தேதி மாலை ஐந்தரை மணி அளவில் கிள்ளான்  நகராண்மைக் கழக ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றம், ஷா அலாம் தமிழர் சங்கம், சிலாங்கூர் மாநில பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம் ஆகியோரின் ஆதரவில்  இந்த நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாமரை குழுமம் தலைவர் டத்தோ துரைசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவிருக்கிறது . மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்  பெ.ராஜேந்திரன் தொழிலதிபர்கள் டத்தோஸ்ரீ தினகரன், டத்தோ டாக்டர் ஏ.பி.சிவம், கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் சுந்தரம்,எழுத்தாளர் அரு. சு. ஜீவானந்தன், டாக்டர் கலையரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள். கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்க தலைவர் டத்தோ இராமநாதன் முதல் நூலை வாங்கி சிறப்பிப்பார்.

ஷா அலாம் தமிழர் சங்கத் தலைவர் சீரியநாதன் வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த நிகழ்வில் முனைவர் ரிச்சட் சாமி   நூல் மற்றும் நூல் ஆசிரியர் குறித்து அறிமுக உரையாற்றுவார்.

டாக்டர் நெடுஞ்செழியன், முனைவர் கன்னியப்பன், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் முருகன்,  டத்தோ கனகராஜ் ஆகியோர் கலந்து கொள்ளும் இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து சிறப்பிக்கும்படி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஷா அலம் தமிழர் சங்கத் தலைவர் சீரிய நாதன் கேட்டுக் கொண்டார்.