சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நோன்பின் மாண்பை கடைபிடியுங்கள் – துன் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

நோன்பின் மாண்பை கடைபிடியுங்கள் – துன் மகாதீர்

நோன்பு மாதம் தொடங்கியுள்ளது. நோன்பு நோற்பது என்பது பசி மற்றும் தாகத்திலிருந்து நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமல்ல. மாறாக, தவறான செயல்களைப் தவிர்ப்பதையும் அது குறிக்கிப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கின்றார்.

குறிப்பாக ஊழலைத் தவிர்ப்பதில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க நமக்கு நாமே பயிற்சியளிப்பதும் இதில் அடங்கும் என்று, திங்கட்கிழமை, புத்ராஜெயாவில், பிரதமர் துறை அமைச்சு ஊழியர்களுடனான சந்திப்பின் போது, டாக்டர் மகாதீர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தவறான ஆசைகளைத் தவிர்க்கும் மனப்போக்கைக் கொண்டிருந்தால், மலேசிய மக்கள் உலகளவில் மதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார். தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஆசைகள் எழுந்தாலும், அதைக் கட்டுப்படுத்தி நோன்பைக் கடைபிடிக்கத் தவறினால் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் சுய கட்டுப்பாட்டை இழப்பது உதாரணமாக ஊழலில் ஈடுபடுவது போன்றவை மனிதர்களை பலவீனப்படுத்தும் என்பதால் இந்தக் கால கட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன