புத்ராஜெயா மே 6,

அமைச்சரவை தற்போது வலுவான குழுவை கொண்டிருப்பதால் அதனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் மறு உறுதிப்படுத்தியுள்ளார்.

நம்பிக்கை கூட்டணி நிர்வாகத்திற்கு வந்து ஓர் ஆண்டுக்குப் பின்னரும் அமைச்சரவையை மாற்ற வேண்டிய தேவை இல்லை என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற 14வது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்று ஓர் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக நடத்திய கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தமது அமைச்சரவை உறுப்பினர்களின் செயல்பாட்டில் தாம் மனநிறைவு கொள்வதாகவும் டாக்டர் மகாதீர் கூறினார். அமைச்சரவையில் மாற்றம் இருக்காது அதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.