சனிக்கிழமை, ஜனவரி 18, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தமக்குத் தெரியாத எதனையும் ஜோகூர் பட்டத்து இளவரசர் பேசக்கூடாது – பிரதமர் வலியுறுத்து
முதன்மைச் செய்திகள்

தமக்குத் தெரியாத எதனையும் ஜோகூர் பட்டத்து இளவரசர் பேசக்கூடாது – பிரதமர் வலியுறுத்து

புத்ராஜெயா, மே.6-

தமக்குத் தெரியாத எந்த ஒரு விவகாரத்தையும் ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் பேசக்கூடாது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

 ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் மற்றும் அம்மாநில நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்துடன் அந்த மலாய் ஆட்சியாளரின் நட்புறவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் மகாதீர் முதலில் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.

எனினும் ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் தொடர்பாக டாக்டர் மகாதீர் கருத்துரைக்க தவறவில்லை.
பட்டத்து இளவரசர் இன்னமும் சிறுவராக இருக்கிறார் என புத்ராஜெயாவில் செய்தியாளர்களுக்கு
வழங்கிய பேட்டியின் போது டாக்டர் மகாதீர் கூறினார்.

என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லை .எனவே தெரியாத விஷயத்தை அவர் பேசாமல் இருப்பதே நல்லது என பிரதமர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன