அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > எவரெஸ்ட் சிகரத்தின் முகட்டைத் தொடும் முயற்சியில் மலேசிய இந்தியர்கள் வெற்றி!
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

எவரெஸ்ட் சிகரத்தின் முகட்டைத் தொடும் முயற்சியில் மலேசிய இந்தியர்கள் வெற்றி!

மலையேறுவதில் கடந்த ஓர் ஆண்டு காலமாக கடும் பயிற்சியில் ஈடுபட்ட டிரீம்ஸ் குழுவசை சேர்ந்த எண்மர், எவரெஸ்ட் சிகரத்தின் முகட்டைத் தொடும் முயற்சியில் இன்று வெற்றிப் பெற்று  நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமையைச் சேர்த்திருக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நேப்பாளத்தை நோக்கி புறப்பட்ட அந்த எண்மரின் பயணம் இன்று, மே 7-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரம் பிற்பகல் 1 மணியளவில், அங்கு வெற்றிக்  கொடியை நாட்டியதன் மூலம் நிறைவு அடைந்திருக்கிறது.

பெர்னாமா தமிழ்ச் செய்திப் பிரிவின் தலைவர் காந்தி காசிநாதன் உட்பட, ராஜன், சுரேஷ், தவா, வாணி, விஜயன், சுந்தரம் மற்றும் சரவணன் ஆகிய எண்மர் இந்தத் துணிகரப் பயணத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டனர்.

சுமார் ஐயாயிரத்து 380 மீட்டர் உயரத்தில் இருக்கின்ற இமய மலையின் தள முகாமை அடைவது எளிதான காரியமல்ல. கடும் பனியையும் கரடு முரடான பாதைகளையும் கடந்து, இவர்கள் தங்கள் இலக்கில் வெற்றிக் கண்டுள்ளனர்.

முறையான பயிற்சி இல்லாமல் மலை ஏற முயல்வது சாத்தியப்படாது என்பதால், கடும் பயிற்சியை மேற்கொண்ட பின்னரே, இவர்கள் அனைவரும் இந்த அசாத்திய முயற்சியில் ஈடுபட்டு அதனை சாத்தியமாக்கி உள்ளனர். இந்த சவால்மிக்க பயணத்தின் மூலம், இந்தியர்களும், இது போன்று மலை ஏறும் நடவடிக்கைளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன