அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பிரகாஷ்ராஜை இனி தமிழ் படங்களில் நடிக்க விடமாட்டோம்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிரகாஷ்ராஜை இனி தமிழ் படங்களில் நடிக்க விடமாட்டோம்!

ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக டெல்லியில் பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ், டெல்லி மாணவர்களின் வாய்ப்பை, தமிழக மாணவர்கள் தட்டி பார்ப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும் தான் ஒரு தமிழன் இல்லை என்றும், ஒரு கன்னடர் என்றும் பேசியுள்ளார். இவருடைய பேச்சால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

பிரகாஷ்ராஜ், கன்னடராக இருந்தாலும், அதிகம் நடித்து அவரை புகழ் பெறச் செய்தது தமிழ் படங்கள்தான். சொந்தமாகவும் அவர் தமிழில் பல படங்களை தயாரித்துள்ளார். தமிழ்ப் படங்களால் பல கோடிகள் சம்பாதித்து, அதனை மறந்து அவர் பேசுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இப்படி பேசிய பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரை தமிழ்ப் படங்களில் நடிக்க விடமாட்டோம் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் அறிக்கையில் ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதோடு, தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓட்டல், கட்டிட வேலைகள் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தாய் தமிழகத்திலேயே பல லட்சம் தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை. உண்மை நிலை இப்படி இருக்க பிரகாஷ்ராஜ் நன்றி மறந்து பேசி இருப்பது கண்டனத்துக்குரியது.

இதற்காக தமிழர்களிடம் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லை என்றால் புதிதாக எடுக்கப்படும் தமிழ் படங்களில் பிரகாஷ்ராஜை நடிக்க விடமாட்டோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அவருக்கு எதிராக கூறப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன