அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தளபதியும் இசை புயலும் அதிர போகிறது டி.எஸ்.ஆர். சினிபிலெக்ஸ்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தளபதியும் இசை புயலும் அதிர போகிறது டி.எஸ்.ஆர். சினிபிலெக்ஸ்!

 

ஷாஆலம், ஆக. 19-

ஐ.ஆர்.டி.கே.எல். உரிமையாளர் டான்ஶ்ரீ ராமசாமி

தளபதி விஜய் நடிப்பில் வெற்றிப்பட இயக்குநர் அட்லியின் படைப்பாக தீபாவளிக்கு வெளியீடு காண்கிறது ‘மெர்சல்’. இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் தமிழன் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிக்சஸ் தமது 100ஆவது படமாக தயாரித்துள்ள இத்திரைப்படத்தை மலேசியாவில் டி.எஸ்.ஆர். சினிபிலெக்ஸ் பெருமையுடன் வெளியிடுகின்றது.

டி.எஸ்.ஆர். சினிபிலெக்ஸ், ஒரு திரைப்படத்தை வெளியிட்டால், அதற்கான விளம்பரங்கள் மிக பிரமாண்ட முறையில் இருக்குமென்பது அனைவரும் அறிந்ததுதான். அந்த வகையில் இந்த முறை மெர்சல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. நாளை அதாவது ஆகஸ்ட் 20ஆம் தேதி, இரவு மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஷாஆலம் ஐ.ஆர்.டி.கே.எல். மாலில் உள்ள டிஎஸ்ஆர் சினிபிலெக்ஸ் திரையரங்கில் நேரடி ஒளிபரப்புச் செய்ய அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றது.

இதில் 100 டிக்கெட்கள் மலேசிய விஜய் ரசிகர்களுக்கும், 100 டிக்கெட்கள்  ரஹ்மானிக் மலேசிய ரசிகர் மன்றத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. மலேசிய கலைத் துறை வரலாற்றில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதை கொண்டாட விஜய் ரசிகர்களும், ரஹ்மான் ரசிகர்களும் தயாராகி விட்டார்கள்.

ரசாலி யூசோப்

ரஹ்மானின் மெர்சல் இசையை கொண்டாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதைவிட இந்த இசை நிகழ்ச்சியில் ரஹ்மான் ஒரு பாடலையும் ரசிகர்கள் முன்னிலையில் பாடவிருக்கின்றார். நிச்சயாக இது ரஹ்மான் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இசை ரசிகர்களுக்கே மிகப் பெரிய இசை விருந்தாக அமையுமென ரஹ்மானிக் மலேசியா தலைவர் ரசாலி யூசோப் கூறினார். இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மலேசியா ரஹ்மான் ரசிகர்கள் திரளாக கலந்து கொள்ளவிருப்பதாகவும் அனேகனிடம் தெரிவித்தார்.

சர்மாநாத்

தளபதிக்கு கொண்டாட்டம் என்பது புதிதல்ல. ஆனால் இது மலேசிய விஜய் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தருமென்பதில் எந்த மாற்றும் கருத்தும் இருக்காது என மலேசிய விஜய் ரசிகர் மன்றத் தலைவர் சர்மாநாத் ராமன் கூறினார். செர்சல் திரைப்படத்தின் ஆளப்போறான் தமிழன், நீதானே நீதானே இந்த இரண்டு பாடல்களும் சமூகத் தளங்களில் முன்னணியில் இருக்கின்றன. இன்னும் 3 பாடல்கள் எப்படி இருக்குமென்ற எதிர்பார்ப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இசை புயலின் பாடலுக்கு தளபதியின் நடனம் எவ்வாறு இருக்குமென்ற கற்பனை இப்போதே ஊற்றெடுக்க தொடக்கிவிட்டது. இந்நிலையில் நேற்று டுவிட்டரில் மெர்சல் ஏமொஜி வெளியிடப்பட்டது, படத்திற்கான ஆவலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மெர்சல் இசை கொண்டாட்டத்திற்காக மலேசிய விஜய் ரசிகர்கள் தயாராகிவிட்டோம். முதல் முறையாக இதனை ஏற்பாடு செய்த, டிஎஸ்.ஆர். சினிபிலெக்ஸ் உரிமையாளர் டான்ஶ்ரீ ராமசாமிக்கும் இந்த வேளையில் விஜய் ரசிகர்களும் ரஹ்மான் ரசிகர்களும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் சர்மா அனேகனிடம் கூறினார்.

நாளை நடக்கும் மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய், இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான், கஜோல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா, எஸ்.ஜே.சூரியா, இயக்குநர் அட்லி உட்பட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே கலந்து கொள்ளவிருக்கின்றது. மெர்சல் இசை வெளியீட்டு விழா இந்திய நேரப்படி மாலை 6.30க்கு தொடங்குகின்றது. மலேசிய நேரப்படி இரவு 9 மணிக்கு டி.எஸ்.ஆரில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன