புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > திருமதி உலக அழகிப் போட்டி: சாதித்தார் மலேசியாவின் கோகிலம் கதிர்வேலு
உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

திருமதி உலக அழகிப் போட்டி: சாதித்தார் மலேசியாவின் கோகிலம் கதிர்வேலு

கோலாலம்பூர் மே.7-

மிஸஸ் வேல்டு 2019 எனப்படும் திருமதி உலக அழகிப் போட்டியில் மலேசியாவின் கோகிலம் கதிர்வேலு மூன்றாவது வெற்றியாளராக தேர்வு பெற்றார். கோலாலம்பூரைச் சேர்ந்த 34 வயதுடைய கோகிலம் கதிர்வேலு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் வேஸ்ட் கேட் ரிசோட்டில் திருமதி உலக அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றதாக திருமதி மலேசியாவுக்கான உலக தேசிய இயக்குனர் டத்தின் ஹர்வின் கோர் தெரிவித்தார்.

இந்த திருமதி உலக அழகிப் போட்டியில் 38 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் டத்தின் ஹர்வின் கோர் தெரிவித்தார். வியட்நாமை சேர்ந்த ஜெனிபர் லீ வெற்றியாளராக வாகை சூடினார்.

திருமதி உலக அழகிப் போட்டியில் 3ஆவது இடத்தைப் பெற்ற கோகிலம் கதிர்வேலு, முதல் இடத்தைப் பெற்ற ஜெனிபர் லீ ,மற்றும் 2ஆவது இடத்தைப் பெற்ற மதபா .

2ஆவது இந்த இடத்தை தென்னாபிரிக்காவின் மதபா ரிக்ஹோட்சோ பெற்றதாக  2017 ஆம் ஆண்டில் திருமதி மலேசியா உலக போட்டியில் வெற்றிபெற்றவருமான ஹர்வின் கோர் கூறினார்.

மூன்று பிள்ளைகளுக்குத் தாயான திருமதி கோகிலம் கடந்த செப்டம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற 2018 -2019 ஆம் ஆண்டுக்கான திருமதி மலேசிய உலக அழகிப் போட்டியில் வெற்றியாளராக வாகை சூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

35 ஆண்டுகளில் மலேசிய பெண்மணி ஒருவர் திருமதி உலக அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன