புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > டத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் ஆனதும் எனது அரசியல் முடிவுக்கு வரும்! – டாக்டர் வான் அஸிஸா
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

டத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் ஆனதும் எனது அரசியல் முடிவுக்கு வரும்! – டாக்டர் வான் அஸிஸா

கோலாலம்பூர் மே 8-

தமது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமரானவுடன் தீவிர அரசியலில் ஓய்வுபெறப் பெற விருப்பதாக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா தெரிவித்தார்.

எனினும் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நடப்பு தவணைக் காலத்தை முடித்துக் கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் துணைப் பிரதமருமான டாக்டர் வான் அஸிஸா கூறினார்.

அன்வார் பிரதமரானவுடன் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அவர் சொன்னார். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஓராண்டு கால நிறைவை கொண்டாடும் வகையில் வழங்கிய சிறப்பு பேட்டியில் டாக்டர் அஸிஸா இதனை தெரிவித்தார். எனினும் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு தொடர்ந்து துணையாக இருக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன