புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > டோனல்ட் டிரம்பைவிட எனது செயல்பாடு மோசமானதாக இல்லை!  – டாக்டர் மகாதீர்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

டோனல்ட் டிரம்பைவிட எனது செயல்பாடு மோசமானதாக இல்லை!  – டாக்டர் மகாதீர்

புத்ராஜெயா மே 9-

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பைவிட அரசாங்கத்தில் தமது செயல்பாடு மோசமாக இல்லையென பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

உலகில் பல தலைவர்கள் உள்ளனர். ஆனால் டோனல் டிரம்பைவிட மோசமானவராக நான் இல்லை .மேலும் பிரிட்பிஷ்தலைவர்கள், பிரான்ஸ் தலைவர்கள், ஸ்பெயின் தலைவர்கள் மற்றும் உலகில் இதர நாடுகளை சேர்ந்த தலைவர்களை விட நான் மோசமானவராக இல்லையென நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய பேட்டியில் டாக்டர் மகாதீர் இதனை தெரிவித்தார்.

என்னை விட சிறப்பான முறையில் சேவையாற்றிய தலைவர் யார் என ஊடகவியலாளர்களை நோக்கி டாக்டர் மஹாதீர் கேள்வி எழுப்பினார். பொதுவாகவே என்னைப்பற்றி நான் சொந்தமாக மதிப்பீடு செய்து கொள்வதில்லை என அவர் சொன்னார்.

என்னை மக்கள் படம் பிடிப்பது கிடையாது. பத்திரிக்கையாளர்கள் மட்டுமே என்னை புகைப்படம் எடுக்கிறார்கள். அது உங்களது கடமை .அதை நான் மதிக்கிறேன். எனது தவறையும் பலவீனத்தையும் என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன் .இதன் வழி என்னை நான் திருத்திக் கொள்ள முடியும் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். வாழ்க்கையின் அனைத்து தரப்பட்ட மக்களிடமிருந்தும் தாம் கருத்துக்களைப் பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.

சிலர் என் மீது வெறுப்பை காட்டுகின்றனர். பலர் என்னுடன் நட்பாக இருக்கின்றனர். அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியோடு கைகுலுக்குகின்றனர். என் மீது அன்பு வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர் என டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

ஒரு தலைவர் என்ற முறையில் 93 வயதிலும் தாம் வலுவோடு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த 93 வயதில் பலரால் சிந்திக்க முடியாது ஆனால் என்னால் உங்களது துடுக்குத்தனமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும் என பத்திரிகையாளர்களை பார்த்து டாக்டர் மகாதீர் கூறினார்.

உங்களது தலைமைத்துவத்திற்கு உங்களது இந்த வயது சாதகமாக இருக்கிறதா என வினவப்பட்டபோது அனுபவத்தைத் தவிர வேறு எந்த ஒரு நன்மையும் இல்லை என்று அவர் சொன்னார். 22 ஆண்டுகாலம் நான் பிரதமராக இருந்தபோது அது எனக்கு அதிகமான படிப்பினையை கற்றுக் கொடுத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

டாக்டர் மகாதீரின் சிந்தனையில் உதித்த 2020 தொலைநோக்கு திட்டம் தற்போது 2025 ஆண்டுவரை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனக்கு முந்தைய தலைவர்கள் நாம் இந்த நோக்கு லட்சியத்தை அடைய கூடாது என்ற நோக்கத்தோடு செயல்பட்டதே இதற்கான காரணம் என்றார் அவர்.

உங்களுக்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்பவர் யார் என்று செய்தியாளர்கள் வினவியபோது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு வழிவிட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் பதவி விலகப் போவதாக ஏற்கனவே வழங்கியிருக்கும் வாக்குறுதியை மீண்டும் மறு உறுதிப்படுத்துவதாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான் ஓய்வுபெறுவது உறுதியாகும் .எனவே அடுத்து யார் வருவார், என்ன நடக்கும் என்பதையெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தமக்குப் பிறகு யார் பிரதமர் பதவிக்கு வந்தாலும் தமது உத்தரவை பின்பற்ற வேண்டியதில்லை.

அதோடு தான் செய்தவற்றை பின்பற்றவும் வேண்டியதில்லை. ஒரு பிரதமர் என்ற முறையில் சிறந்தவற்றை சிந்தித்து செயல்படுத்தும் முழு உரிமை அன்வாருக்கு உள்ளது .சாத்தியமான வகையில் மலேசியாவை சிறந்த நாடாக உருவாக்குவதுதான் தமது பணி என்றும் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன