செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > லுகாஸ் மோரா அதிரடியில் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது டோட்டன்ஹம்!!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

லுகாஸ் மோரா அதிரடியில் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது டோட்டன்ஹம்!!

ஆம்ஸ்டர்டாம், மே 9-

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில், லுகாஸ் மோரா அதிரடி ஆட்டத்தால் டோட்டன்ஹம் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இறுதி ஆட்டத்தில் அவ்வணி இங்கிலாந்தைச் சேர்ந்த மற்றொரு முன்னணி கால்பந்து அணியான லிவர்பூலை சந்திக்கின்றது.

வியாழக்கிழமை அதிகாலை நெதர்லாந்து அயெக்ஸ் அரங்கில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டோட்டன்ஹம் 2-3 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கான மூன்று கோல்களையும் லுகாஸ் மோரா அடித்தார்.

முதல் பாதி ஆட்டத்தில்ஆட்டத்தில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் அயெக்ஸ் முன்னிலை பெற்றது. டோட்டன்ஹம் அரங்கில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அவ்வணி 0-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றதால், 3-0 என்ற மொத்த எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தது.

இதனால் டோட்டன்ஹம் இறுதி ஆட்டத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலை எழுந்த நிலையில், அவ்வணியின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரரான லுகாஸ் மோரா பிற்பாதி ஆட்டத்தில் அதிரடியாக மூன்று கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் அவர் தனது அணிக்கான மூன்றாவது கோலை அடித்த நிலையில், அயெக்ஸ் ஆட்டக்காரர்கள் நிலைகுலைந்து போனார்கள்.

ஆட்டத்தின் இறுதியில் எப்படியாவது கோல் அடித்து விட வேண்டும் என அயெக்ஸ் முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடிந்தது. இதனால் 2-3 என்ற கோல் எண்ணிக்கையில் டோட்டன்ஹம் வெற்றி பெற்றது. மொத்த கோல் எண்ணிக்கை 3-3 ஆக இருந்தாலும் எதிரணி அரங்கில் அதிக கோல்களை அடித்ததால் டோட்டன்ஹம் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண இறுதி ஆட்டத்திற்கு உள் நுழைய வேண்டும் என்ற அயெக்ஸ் அணியின் கனவு கலைந்து உள்ளது. ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக டோட்டன்ஹம் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன