அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > யூரோப்பா லீக் : இறுதி ஆட்டத்தில் செல்சி !
விளையாட்டு

யூரோப்பா லீக் : இறுதி ஆட்டத்தில் செல்சி !

லண்டன், மே.10 –

2018/19 ஆம் பருவத்துக்கான யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு செல்சி தகுதிப் பெற்றிருக்கிறது. வியாழக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் செல்சி 1 – 1 என்ற கோல்களில் ஜெர்மனியின் ஐந்த்ராக் பிரான்க்பெர்ட் அணியுடன் சமநிலைக் கண்டது. எனினும் வெற்றியாளரை நிர்ணயிக்க வழங்கப்பட்ட பினால்டி கீக்கில் செல்சி 4 – 3 என்ற கோல்களில் வென்றது.

கடந்த வாரம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் செல்சியும் ஐந்த்ராக் பிரான்க்பெர்ட் அணியும் 1 – 1 என்ற நிலையில் சமநிலைக் கண்டிருந்தன. ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் லொப்டஸ் சீக் போட்ட கோலின் வழி செல்சி முன்னிலைக்குச் சென்றது. எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் லுக்கா ஜோவிச் போட்ட கோலின் மூலம் பிரான்க்பெர்ட் ஆட்டத்தை சமப்படுத்தியது.

முழு நேர ஆட்டம் சமநிலையில் முடிந்ததால்  வெற்றியாளரை நிர்ணயிக்க கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் ஆட்டம் சமநிலையில் முடிந்ததை அடுத்து பினால்டி வழங்கப்பட்டது. இதில் செல்சி கேப்டன் செசார் அஸ்புலிகுவேதா ஒரு பெனால்டியை நழுவ விட்டார்.

எனினும் செல்சி கோல்காவலர் கெப்பா அரிஸ்பலாகா இரண்டு பெனால்டிகளைத் தடுத்து நிறுத்தி தமது அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். மே 29 ஆம் தேதி அசர்பைஜானின் பாக்குவில் நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் செல்சி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியைச் சேர்ந்த அர்செனலை எதிர்கொள்ள விருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன