நான் இடைக்கால பிரதமர் தான்! – துன் டாக்டர் மகாதீர்

புத்ராஜெயா, மே 10-

நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவுடன் பிரதமர் பதவியிலிருந்து விலகி விடுவேன் என துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே தாம் பதவியிலிருந்து விலகி விடுவேன் என டாக்டர் மகாதீர் மீண்டும் மறு உறுதிப்படுத்தினார்.

இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும்பாலான தவறுகளை நாம் திருத்தி விடுவோம் அதன்பின் மற்றவர்கள் குறைவான பிரச்சினைகளையே எதிர்நோக்குவார்கள் என வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு வழங்கிய பெட்டியில் டாக்டர் மகாதீர் தெரிவித்ததாக சிங்கப்பூர் நியூ ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டது.

நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவுடன் பிரதமர் பதவியிலிருந்து விலகி விடுவேன் என துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே தாம் பதவியிலிருந்து விலகி விடுவேன் என டாக்டர் மகாதீர் மீண்டும் மறு உறுதிப்படுத்தினார்.

பதவி விலகுவதற்கு முன் எவ்வளவு காலம் பிரதமராக இருந்து வருவீர்கள் என டாக்டர் மகாதீரிடம் வினவப்பட்டபோது இரண்டு ஆண்டுகளா அல்லது 3 ஆண்டுகளா என்பது எனக்கு தெரியாது .ஆனால் நான் இடைக்கால பிரதமர் தான் என அவர் மறுமொழி தெரிவித்தார்.

முன்னதாக இன சமய பாகுபாடு இன்றி அனைத்து மலேசியர்களின் ஆதரவு நம்பிக்கை கூட்டணிக்கு தேவை என பிரதமர் வலியுறுத்தினார். அதோடு அரசாங்கம் வரைந்திருக்கும் பொருளாதார வடிவம் நாட்டின் சுபிட்சத்தை பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தைக் கொண்டதாகும். மலேசியாவின் நீடித்த மேம்பாட்டைக் கொண்ட நாடாக உருவாக்கும் நோக்கத்தை இது கொண்டிருப்பதோடு 2030 ஆம் ஆண்டு வாக்கில் அனைத்து நிலைகளிலும் சரி நிகரான வளர்ச்சியை கொண்டுவரும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார் .