திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா!
சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா!

கோலாலம்பூர் மே 10-

மலேசிய உருமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் மலேசியத் தமிழர் திருநாள் கலைவிழா 2019 மிக விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த தமிழர் திருநாள் கலை விழா மே 19 ஆம் தேதி மாலை 4 மணி தொடங்கி 7 மணி வரை, பூச்சோங் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் நடைபெறவிருக்கின்றது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் இந்த நிகழ்ச்சியில் முதன்மை அங்கமாக இடம்பெறவிருக்கின்றது. தமிழர் கலை கலாச்சார வாழ்வியல் விஷயங்களை வழி உணர்த்தும் உன்னத நிகழ்ச்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் மாபெரும் இசை கலாச்சார நிகழ்ச்சியும் இதில் இடம் பெறுகின்றது. தமிழர்களின் வாழ்வியல் கூறுகளை எடுத்துரைக்கும் விதமாக இந்த கலைவிழா நிச்சயம் அனைவரையும் கவரும் என ராகா அறிவிப்பாளர் மாறன் தெரிவித்தார்.

மலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தமிழர் திருநாள் பெருவிழா மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அதனால் சுற்றுவட்டார பொதுமக்கள் இவ்விழாவில் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

One thought on “மலேசிய உறுமி மேளம் இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் கலை விழா!

  1. Darren Danny

    Tamilar thirunaal is an awesome event for all urumi mellam players in malaysia and it has become a empire of urumi mellam samrajayam ..credit to the authority of ppumm
    Persatuan pemuzik urumi melam malaysia Team and founder..encourage for young youth in music of natural exist..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன