அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மின்னலின் ‘சிகரம் தொடு’ நிகழ்ச்சியில் வியாபார துறையில் துடிப்புடன் செயல்பட்டு வரும் இளைஞர்களின் சந்திப்பு!
கலை உலகம்சமூகம்

மின்னலின் ‘சிகரம் தொடு’ நிகழ்ச்சியில் வியாபார துறையில் துடிப்புடன் செயல்பட்டு வரும் இளைஞர்களின் சந்திப்பு!

கோலாலம்பூர், மே 10-

வியாபார யுத்திகள், நுணுக்கங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தகவல்களோடு ஒவ்வொறு திங்கட்கிழமைகளில் இரவு மணி 10.30க்கு மின்னல் எப் எம்-மில் சிகரம் தொடு நிகழ்ச்சி ஒலியேறுகின்றது. மின்னலின் அறிவிப்பாளர் சத்யா நிகழ்ச்சியை வழி நடத்துகின்றார்.

வியாபார துறையில் துடிப்புடன் செயல்பட்டு வரும் இளைஞர்களின் சந்திப்பும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுவருகின்றது. இந்திய சமுதாயத்தை வர்த்தகர் சமுதாயமாக மாற்றும் ஒரு மாபெரும் முயற்ச்சியாக இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் படைக்கப்படுகின்றது.

சென்ற வார நிகழ்ச்சியில் விஸ்வ பாராதி (32 வயது) முடி திருத்தும் நிலையத்தின் உரிமையாளரின் சந்திப்பு ஒலியேறியது. வரும் திங்கட்கிழமையன்று, food-truck வியாபாரத்தை பற்றி நிறைய விபரங்களை பகிர்ந்துக்கொள்ளவுள்ளோம். வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை அடுத்த கட்ட நகர்த்தலுக்கு தடம் பதிக்க இந்நிகழ்ச்சி வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

திங்கட்கிழமைகளில் தயாராகக் காத்திருங்கள். இரவு மணி 10.30க்கு! இந்நிகழ்ச்சிக்கான விளக்கங்களை பெற 03-22887497 எனும் எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியை மின்னல் எப் எம்-மின் you tube-லும் கேட்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன