ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சண்டகான் நாடாளுமன்ற இடைத்தேர்தல்; ஜசெக வெற்றி
அரசியல்முதன்மைச் செய்திகள்

சண்டகான் நாடாளுமன்ற இடைத்தேர்தல்; ஜசெக வெற்றி

சண்டகான், மே 11-

சண்டகான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஜ.செ.க வெற்றி பெற்றது

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட  ஜனநாயக செயல் கட்சியின் விவியன் வோங்  மொத்தம் 16,012  வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அவர் 11,521 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தலில் அம்னோவின் ஆதரவோடு களம் இறங்கிய பி பி எஸ் கட்சியின் லின்டா சென் 4,491 வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டார்.

சுயேச்சை வேட்பாளர் ஹம்சா அப்துல்லா 778  வாக்குகளையும்,சியா யூ சிங் 178 வாக்குகளையும் சுலைமான் அப்துல் சமாட் 126 வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டனர். இந்த வெற்றியின் வழி சண்டகான் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் ஜ.செ.க நிலைநிறுத்திக் கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன