அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பெரிய வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதைவிட கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்; மலேசியர்களுக்கு டத்தோஸ்ரீ  அன்வார் வலியுறுத்து
அரசியல்முதன்மைச் செய்திகள்

பெரிய வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதைவிட கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்; மலேசியர்களுக்கு டத்தோஸ்ரீ  அன்வார் வலியுறுத்து

புத்ராஜெயா, மே 12-

இன மற்றும் சமய பாகுபாடு இன்றி  பெரிய அளவிலான வழிபாட்டுத் தலங்களை நிர்மானிப்பதை விட மலேசியர்கள் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என பி கே ஆர் தலைவர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில்  நமது பள்ளிவாசல்கள் மற்றும் ஆலயங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். எனினும் கல்வியை நம்பியே சிறந்த எதிர்காலம் இருப்பதாக அவர் நினைவுறுத்தினார்.

ஏழைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முக்கிய பணியாக இருந்தாலும் கல்வி அம்சத்தில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென டத்தோஶ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

இன பாகுபாடு இன்றி ஏழை மக்களுக்கு உதவுவதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டியது  அவசியமாகும் . கல்விக்கு  கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும் . கல்வியை தியாகம் செய்துவிட்டு மிகப்பெரிய பள்ளிவாசல்களை நாம் கொண்டிருக்க முடியாது. அது போல் தான் இந்தியர்கள் ஆலயங்களை மிகவும் பிரமாதமாக நிர்மாணித்து விட்டு தமிழ் பள்ளிகளை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றார் அவர்.

மலேசிய இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் புத்ராஜெயாவில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

மலேசிய இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் புத்ராஜெயாவில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன