அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ரசிகர்களின் ஏளனத்து ஆளான போல் பொக்பா !
விளையாட்டு

ரசிகர்களின் ஏளனத்து ஆளான போல் பொக்பா !

மென்செஸ்டர், மே.13-

2018/19 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டி மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு ஒரு மோசமான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. லீக் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்த மென்செஸ்டர் யுனைடெட் கடைசி ஆட்டத்தில் கார்டிப் சிட்டியிடம் 0-2 என்ற கோல்களில் தோல்வி கண்டது.

இந்த பருவத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டின் மோசமான அடைவுநிலையினால் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள், போல் பொக்பா மீது தங்களின் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர். கார்டிப்புக்கு எதிரான ஆட்டம் முடிவடைந்ததும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் திடலில் கூடியிருந்தனர்.

அப்போது ரசிகர்கள் சிலர் போல் பொக்பாவை தகாத வார்த்தையில் திட்டியது மட்டும் இல்லாமல் நிர்வாகி ஓலே குன்னர் சோல்ஜ்ஸ்கர் உடனடியாக அவரை விற்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அந்த ரசிகர்களைப் பார்த்து பொக்பா சமாதானமாக இருக்குமாறு கையெடுத்து வேண்டிக் கொண்டாலும் அவர்கள் அவரை தொடர்ந்து தகாத வார்த்தைகளில் விமர்சித்தனர்.

இந்த பருவத்தில் 16 கோல்களைப் போட்டிருப்பதுடன் , மென்செஸ்டர் யுனைடெட்டின் 11 கோல்களுக்கு உதவிப் புரிந்துள்ள போல் பொக்பா, மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளார். வரும் கோடை காலத்தில் அவர் ஸ்பெயினின் ரியல் மெட்ரிட்டுக்கு செல்லக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன