அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பிரீமியர் லீக் – தங்க காலணியை வென்ற மூவர் !
விளையாட்டு

பிரீமியர் லீக் – தங்க காலணியை வென்ற மூவர் !

லண்டன், மே.13-

இங்கிலீஷ் பிரீமியர் கால்பந்துப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த ஆட்டக்காரருக்கான தங்க  காலணி விருதை இம்முறை மூவர் வென்றிருக்கின்றனர். கடந்த ஆண்டில் இந்த விருதை வென்ற லிவர்பூலின் முஹமட் சாலா 22 கோல்களுடன் தங்க காலணி விருதை தற்காத்துக் கொண்ட வேளையில் கடைசி நாளில் இரண்டு கோல்களைப் புகுத்தியதன் வழி லிவர்பூலின் சாடியோ மானே, அர்செனலின் பியேரி எமெரிக் அவ்பாமேயாங்கும் தங்க காலணி விருதுகளை வென்றனர்.

இந்த மூன்று ஆட்டக்காரர்களும் 22 கோல்களைப் போட்டிருக்கின்றனர். வோல்வர்ஹாம்ப்டனுக்கு எதிரான ஆட்டத்தி சாடியோ மானே இரண்டு கோல்களைப் போட்ட வேளையில் காபோன் நாட்டைச் சேர்ந்த அவ்பாமேயாங், பெர்ன்லிக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்தார்.

சாலா, மானே ஆகிய இருவரும் சேர்ந்து 44 கோல்களைப் போட்டிருந்தாலும், பிரீமியர் லீக் பட்டத்தை வெல்வதில் லிவர்பூல் மீண்டும் தோல்வி கண்டுள்ளது.  ஜூர்கன் குலோப்பின் நிர்வாகத்தின் கீழ் சாலா, மானே ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளையில் அவ்பாமேயாங், குலோப்பின் முன்னாள் ஆட்டக்காரர் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த பருவத்தில் சாலா 32 கோல்களைப் போட்ட வேளையில், இப்பருவத்தில் 22 கோல்களை மட்டுமே போட்டிருக்கிறார். மென்செஸ்டர் சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ 21 கோல்களை மட்டுமே போட்டிருக்கிறார். எனினும் தொடர்ந்து ஐந்து பருவங்களாக, அகுவேரோ 20-க்கும் மேற்பட்ட கோல்களைப் போட்டு அர்செனலின் முன்னாள் ஆட்டக்காரர் தியேரி ஹென்ரியின் சாதனையை  அவர் சமப்படுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன