புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > ஆசிய மில்லினியம் யுனிவர்ஸ் அழகிப் பட்டத்தை வழக்கறிஞர் கோகிலவாணி வென்றார்!
உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆசிய மில்லினியம் யுனிவர்ஸ் அழகிப் பட்டத்தை வழக்கறிஞர் கோகிலவாணி வென்றார்!

கோலாலம்பூர் மே 13-

ஆசிய மில்லினியம் யுனிவர்ஸ் அழகிப் பட்டத்தை பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகிலவாணி வடிவேலு வென்றார். இதன் இறுதி சுற்று தலைநகர் நியூ தங்கும் விடுதியில் நடந்தது.

எஸ்டோனியா,ததஸ்தான், கனடா, அமெரிக்கா, வெனிசுலா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், வங்காளதேசம், ரஷ்யா, சீனா இந்தோனேசியா என 16 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். இவர்களில் கோகிலவாணி வடிவேலு அழகி பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்திருக்கிறார்.

அஸ்திவாரம் அறவாரியத்தின் மூலம் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த கோகிலவாணி இந்த அழகி பட்டத்தை வென்று இருப்பது மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக வழக்கறிஞரான இவர் தொடர்ந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வறுமையின் கோட்டின் கீழ் இருக்கும் குடும்பத்தினர்களுக்கு இவர் அவ்வப்போது உதவிகளை வழங்கி வந்தார். அதோடு ஆண்டிற்கு ஒருமுறை அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுக்கான நடவடிக்கைகளையும் இவர் முன்னெடுத்து வந்தார்.

இந்த வெற்றியை காலம்சென்ற தமது தந்தை வடிவேலுவுக்கு சமர்ப்பிப்பதாக கோகிலவாணி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். தமது தந்தை எப்பொழுதும் பெண்களின் உரிமை குறித்து பேசியதாகவும் பெண்கள் தனித்து இருந்தாலும் சுய காலில் நிற்பதற்கு மனவலிமையை பெற்றிருக்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தியதாகவும் கோகிலவாணி குறிப்பிட்டார்.

தமது தந்தையின் மிகச் சிறந்த வழிகாட்டல் தான் நமது வெற்றிக்கு வழிவகுத்ததாக கூறிய அவர் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமது தந்தை இல்லாதது மனவருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார். இருந்தாலும் தமது தந்தையின் ஆசீர்வாதத்தின் கீழ் இன்னும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாகவும் கோகிலவாணி கூறினார்.

மலேசியாவைப் பிரதிநிதித்து உலகளாவிய போட்டியில் பங்கு பெற்று வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்ற கோகிலவாணிக்கு அநேகன் இணையதள பதிவேடு தமது வாழ்த்தினை தெரிவித்து கொள்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன