அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தொழிலாளர் பற்றாகுறையால் கடைகளுக்கு மூடு விழா! கண்டும் காணாத இந்திய அமைச்சர்கள் – அயுப் கான் சாடல்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தொழிலாளர் பற்றாகுறையால் கடைகளுக்கு மூடு விழா! கண்டும் காணாத இந்திய அமைச்சர்கள் – அயுப் கான் சாடல்

கோலாலம்பூர். மே 13-

மலேசிய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் முதன்மை பிரச்சினையான அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை விவகாரம் தொடர்பில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு வழங்கிய மனுக்கள் மூலையில் தூங்குகிறதா என்று பிரேஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அயுப் கான் கேள்வி எழுப்பினார்.

வர்த்தகர்கள் பிழைப்பில் மண்ணை போட்டு வரும் இவ்விவகாரத்தினால் இந்திய முஸ்லிம் மட்டுமின்றி இந்திய வர்த்தகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய அரசாங்கத்தில் கெடுபுடிகள் இருந்தாலும் எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு பிரச்சினைகள் இன்றி சீராக இருந்தது.

ஆனால் நம்பிக்கை கூட்டணி அரசு எங்களை துளியும் மதிப்பதில்லை. இவ்விவகாரம் தொடர்பில் ஓராண்டாக போராடி வருகிறோம் ஆனால் இதுவரை எந்தவித பதிலும் இல்லை. கிட்டத்தட்ட 10 மனுக்கள் அரசாங்கத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியராக இருக்கும் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் எங்களுக்கு உதவி வில்லை.

அவரிடம் இது குறித்து பல பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மனுக்கள் வழங்கப்பட்டது. அந்த அமைச்சின் ஏற்பாட்டில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற டவுள் ஹோல் முறையிலான பேச்சு வார்த்தையில் வர்த்தகர்கள் திராளாக கலந்து கொண்டு பிரச்சினைகளை எடுத்து கூறினர். அதற்குன் பதில் இல்லை.

முந்தைய அரசு தேர்தலுக்கு முன்பு 30,000 அந்நிய தொழிலாளர்களை தருவிக்க அனுமதி வழங்கி அது தொடர்பான நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அது கிடப்பிலேயே கிடக்கிறது.

அதே போன்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்தவர் தனது தாயகத்திற்கு திரும்பும் போது அவருக்கு பதிலாக மாற்றுத் தொழிலாளரை தருவித்து கொடுப்பதாக அரசாங்கம் வழங்கிய முந்தைய வாக்குறுதியும் இதுநாள் வரை காற்றில் பறந்த வண்ணமாக உள்ளது.

இந்நாட்டில் உணவகம், பொற்கொல்லர், உலோக மறுசுழற்சி, முடி திருத்துவோர், ஜவுளி உள்ளிட்ட 11 இந்திய சங்கங்கள் இதே பிரச்சினையை தினந்தோறும் எதிர்நோக்கி வருகின்றனர். இன்று தீர்வு கிடைத்துவிடும் நாளை தீர்வு கிடைத்துவிடும் என்று அனுதினமும் இலவு காத்த கிளிகளாக அந்நிய தொழிலாளர்களின் தருவிப்புக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்.

இதன் விளைவாக நாடு தழுவிய அளவில் பல இந்தியர்களின் வியாபாரா தலங்கள் ஆள் பற்றாக்குறையால் பல்வேறு நட்டங்களை சந்தித்து முடிவில் தங்களின் வியாபாரத்தை மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

அண்மையில் லெபோ அம்பாங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில் ஜவுளிக் கடை, உணவகம் என்று மூன்று கடைகளுக்கி மூடுவிழா செய்துள்ளதாக அங்குள்ள வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது போதாத குறைக்கு சிலாங்கூர் மாநிலத்திலும் நெகிரி செம்பிலானிலும் அமைந்துள்ள மூன்ற் அல் சலாம் உணவகங்கள் ஆள் பற்றாக்குறையால் முடக்கப்பட்டுள்ளது. இப்படியே போனால் இந்திய வியாபாரிகள் தலையில் துண்டு போடும் நிலைக்கு ஆளாகி விடுவர்.

இந்திய வியாபாரிகளின் பிரச்சினைகளை சீன, மலாய்க்கார அமைச்சர்களிடமா நாங்கள் சென்று முறையிடுவது. அன்று ஒரு அமைச்சர் வீற்றிருந்தாலும் எங்கள் குறைகளை துணிச்சலாக அமைச்சரவையில் எடுத்து சொல்லி அதற்கு தீர்வு கண்டனர். ஆனால் இன்று ஒனறுக்கு நான்கு அமைச்சர்கள் இருந்தும் ஒன்றுக்கும் உதவாமல் உள்ளனர்.

முந்தைய அரசில் தான் அடிப்படை தேவைகளுக்கு கூட தெரு ஆர்பாட்டம், கொடி பிடிக்கும் நடவடிக்கைகள் இருந்து வந்தன. நம்பிக்கை கூட்டணி அரசும் எங்கள் நம்பிக்கையை சிதைத்து விட்டால் பழைய குருடி கதவை திரவடி என்பதற்கேற்ப மீண்டும் பிரதமர் அலுவலகன் முன்வளாகத்தில் எங்கள் ஆட்சேபத்தையிம் தேவையையும் பேரணி முலமாக நிருபிக்க வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் உள்ளோம்.

அதற்கு இடம் கொடுக்காமல் விரைந்து எங்களின் கோரிக்கையை கண் திறந்து பார்க்குமாறு மனிதவள அமைச்சிடமும் உள்துறை அமைச்சிடமும் ஒட்டு மொத்த இந்திய வியாபாரிகள் சாபில் கேட்டு கொள்வதாக அயுப் கான் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன