அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வாரிசான் தலைமையிலான மாநில அரசை மக்கள் ஏற்றுக்கொண்டனர்! – ஷாபி அப்டால்
அரசியல்முதன்மைச் செய்திகள்

வாரிசான் தலைமையிலான மாநில அரசை மக்கள் ஏற்றுக்கொண்டனர்! – ஷாபி அப்டால்

கோத்தா கினபாலு மே 13-

ஜனநாயக செயல் கட்சி, பி கே ஆர், யுப்கோ ஆகியவற்றுடனான வாரிசான் தலைமையிலான மாநில அரசாங்கங்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதை சண்டகான் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நிருபித்துள்ளதாக சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் தெரிவித்தார்.

முஸ்லிம் பூமிபுத்ராக்கள் உட்பட சபா மக்கள் வாரிசான் தலைமையிலான சபா அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர் என்பதை இந்த இடைத்தேர்தலின் வெற்றி பிரதிபலிப்பதாக முகமட் ஷாபி கூறினார். சீனர்கள், முஸ்லிம் பூமிபுத்ராக்கள் மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவும் இந்த இடைத்தேர்தலில் ஜ.செ.க வேட்பாளர் விவியன் வோங்கிற்கு கிடைத்திருக்கிறது என்றார் அவர்.

மூன்று இடைத்தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விக்குப் பிறகு சண்டகான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் விவியன் வோங்கிற்கு கிடைத்த வெற்றி நம்பிக்கை கூட்டணிக்கு புதிய பலத்தை கொடுத்திருப்பதாக பி. கே .ஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கூறியிருக்கிறார்.

30 வயதுடைய தொடர்புத்துறை பட்டதாரியுமான விவியன் வோங் 11,521 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார். அம்னோவின் ஆதரவோடு களத்தில் இறங்கிய பி. பி .எஸ் கட்சியைச் சேர்ந்த டத்தோ லின்டா சென் 4,491 வாக்குகளைப் பெற்று மோசமாக தோல்வியடைந்தார். விவியன் மொத்தம்16,012 வாக்குகளைப் பெற்றார்.

எதிர்பார்க்கப்பட்டதை விட இது விவியனுக்கு கிடைத்த மிகச் சிறப்பான வெற்றி என ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளரும் நிதி அமைச்சருமான

லிம் குவான் எங் வர்ணித்தார். முஸ்லிம்கள் பெரும்பான்மையான வாக்காளர்களை கொண்ட தொகுதிகளில் அதிகமான வாக்குகள் கிடைப்பதற்கு சபா வாரிசான் கட்சி கடுமையாக உழைத்திருப்பதாகவும் அவர்களுக்கு இந்த வேலையில் அக்கட்சிக்கு தாம் நன்றி கூறக் கடமைப் பட்டிருப்பதாவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரவேசிக்கும் வயது குறைந்த பெண் உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் விவியன் வோங் சண்டகான் தொகுதி மக்களுக்கு பொறுப்புணர்வோடு தமது கடமையை செய்வார் என்றும் லிம் குவான் எங் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன