அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > விவேக கைத்தொலைபேசியை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை! – துன் டாக்டர் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

விவேக கைத்தொலைபேசியை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை! – துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர் மே 14

வேகத்தடை விவேக கைத்தொலைபேசியை முழுமையாக எப்படி பயன்படுத்துவது என்பது தமக்கு தெரியவில்லை என்பதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக்கொண்டுள்ளார்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் இன்றைய விவேக கையடக்க தொலைபேசி சாதனங்கள் தம்மால் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு இருப்பதாக 93 வயதுடைய டாக்டர் மகாதீர் தெரிவித்தார். இன்றைய தொழில்நுட்பம் என்னைப் போன்ற வயதானவர்களுக்கு எளிதாக இல்லை .இந்த புதிய தொழில் நுட்பங்கள் சிலவற்றை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

இன்றைய இளம் தலைமுறையினர் புதிய தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வமாக இருப்பதோடு அதனை எளிதாக முழுமையாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றார் அவர். என்னைப் போன்ற வயதானவர்களால் இத்தகைய புதிய சாதனங்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள முடியவில்லை என சுல்தான் அப்துல் ஹமிட் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.

நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை 10 வயது சிறுமியிடம் இருந்து தாம் கற்றுக் கொள்வதாக டாக்டர் மகாதீர் நினைவுகூர்ந்தார்.

புதிய விஷயங்களை அச்சிறுமி எனக்கு சொல்லித் தருகிறார் அதோடு கணினியை மிகவும் விரைவாக கையாளக் கூடிய ஆற்றலையும் அச்சிறுமி கொண்டிருக்கிறார். எப்படி பயன்படுத்துவது என்பதை அந்த சிறுமி எனக்கு சொல்லிக் கொடுக்கிறார் .எனினும் இதனைக் கையாள்வதில் தம்மால் இன்னமும் முடியவில்லை என டாக்டர் மகாதீர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன