புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அனைவரும் வீடுகளைக்  கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்படும்!  -அமைச்சர் ஜூரைடா
அரசியல்முதன்மைச் செய்திகள்

அனைவரும் வீடுகளைக்  கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்படும்!  -அமைச்சர் ஜூரைடா

கோலாலம்பூர், மே 14-

நிலைத்தன்மைமிக்க நாட்டை உருவாக்கும் முயற்சியாக  பாரபட்சமில்லாத  முழுமையான வீடமைப்புத் திட்டம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“மலேசிய மக்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கென்று தனித்தனி வீடமைப்புத் திட்டங்களை அமைப்பது என்பது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல. நிச்சயம் இந்த முறையானது மக்கள் மத்தியில் சமூக இறுக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. சமூக தொடர்பு என்பது சமூகத்தில் குறுகிய சிந்தனையைப் போக்கி பரந்த பார்வையை உருவாக்கும்” என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் கூறினார்.

அதே வேளையில், துறைகள் பாகுபாடின்றி அமைக்கப்படும் வீடமைப்பு பகுதிகள் வழி மலேசியர்கள் மத்தியில் பரந்த பார்வையும் சிந்தனையையும் ஏற்படுத்துவதோடு  ஒருவருக்கொருவர் அனுபவங்களையும் தொழில்திறனாற்றல்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் அவர் சொன்னார்.

சமூக ஒருங்கிணைப்பானது தரமான சமூகத்தை உருவாக்குவதோடு நிலைத்தன்மைமிக்க, மேம்பாடடைந்த நாடாக மலேசியாவை மேம்படுத்தும் கனவு நனவாகும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். மலேசியர்கள் இன சமய பேதமில்லாமல் அனைத்து வகையான தொழில்கள் புரிபவர்களோடு இணைந்து வாழ்வதையே என்று அரசாங்கம் விரும்புகிறது என்றார் அவர்.

வீடுகளைப் பெறுவதில் எந்தவொரு தரப்பையும் புறக்கணிக்கப்பதாகவோ குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு உதவுவதாகவோ இந்த அமைச்சு மீது எவரும் குறைகூறலாகாது. ஒரு மேம்பாடடைந்த நாட்டில் அனைத்து வசதிகளையும் கொண்ட வீடமைப்புத் திட்டத்தில் வாழ ஒவ்வொரு மலேசியருக்கும் இருக்கும் உரிமை மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதே அமைச்சின் நோக்கமாகும் என்றும் அவர் சொன்னார்.

 “ஒரு வேளை நாட்டின் 6ஆவது பிரதமரைப் போன்ற உயர்குடி மக்களுக்கு இது போன்ற சமூக ஒருங்கிணைப்பு முறையை புரிந்த கொள்ள முடியாமல் போகலாம். மலேசியாவின் ஊழல்களின் தந்தைக்கு ஊழல்களை அதிகரிப்பது மட்டுமே தெரியும், நாட்டை மேம்படுத்த தேவயான அர்ப்பணிப்பு உணர்வு அவரிடம் இல்லை” என்று  ஜூரைடா தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன