அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மைக்கி எங்களை ஏமாற்றி விட்டது! எங்கே எங்கள் பணம்?
சமூகம்முதன்மைச் செய்திகள்

மைக்கி எங்களை ஏமாற்றி விட்டது! எங்கே எங்கள் பணம்?

கோலாலம்பூர் மே 14-

மலேசிய இந்திய வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் மைக்கிற்கு அந்நிய தொழிலாளர்களை தருவிப்பற்கான விண்ணப்பத்திற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை மலேசிய சிகை அலங்காரதினர் நிலைய உரிமையாளர்கள் சங்கம் வழங்கியிருந்தது. ஆட்கள் கிடைக்காத பட்சத்தில் மைக்கியின் புதிய தலைமைத்துவம் பணத்தை திரும்பி வழங்குவோம் என்று கூறியிருந்த நிலையில் இதுவரையில் அந்த பணம் கிடைக்கவில்லை என ராஜேந்திரன் குற்றம் சாட்டினர்.

முறையான ஆவணங்களை ஒப்படைக்குமாறு அவர்கள் கூறிய நிலையில், தங்களது அங்கத்தினர் அன்னிய தொழிலாளர்களை தருவிப்பதற்காக வழங்கிய பணத்திற்கான ஆதாரங்களை எங்களின் வழங்கினார்கள். அதை நாங்கள் மைக்கியிடம் ஒப்படைத்துவிட்டோம். ஆனால் இப்பொழுது இன்னும் பல ஆவணங்கள் தேவை என அவர்கள் கூறி அலைக்கழிக்கின்றனர் என சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன் சாடினார்.

மைக்கியின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் என அனைவரும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவில்லை. எங்கள் பணம் என்ன ஆனது என்றும் எங்களுக்கு தெரியவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்குறுதிகளை வழங்குவதும் முக்கியமல்ல. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை எங்களுக்குத் திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர். குறிப்பாக மைக்கில் நாங்களும் அங்கத்துவம் பெற்றுள்ளோம் அதனால் சம்மேளனத்தில் எங்களது 2 அங்கத்தினரையாவது இணைத்திருக்க வேண்டும் அந்த நடவடிக்கையையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை என ராஜேந்திரன் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டிற்கு மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் என்ன பதில் தர போகிறார்கள்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன