அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ராணுவ வாக்காளர்கள் இடமாற்றம்; 4 நாடாளுமன்றத் தொகுதிகளின் முடிவு செல்லுமா ?? -லிம் கிட் சியாங்
முதன்மைச் செய்திகள்

ராணுவ வாக்காளர்கள் இடமாற்றம்; 4 நாடாளுமன்றத் தொகுதிகளின் முடிவு செல்லுமா ?? -லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், மே.15-

ராணுவ  வாக்காளர்களை நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இடமாற்றம் செய்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் முந்தைய நிர்வாகம் மேற்கொண்ட இந்நடவடிக்கைகளினால் அந்த நாடாளுமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் சட்டபூர்வமானாதா இல்லையா என்பது அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னாள் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடியின்  பாகான் டத்தோ,  முன்னாள் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேனின் செம்பூரோங், முன்னாள் ம.இ.கா. தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியத்தின் சிகாமாட், அம்னோவின் நடப்பு உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரியின் பேரா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ராணுவ வீரர்களின் வாக்குகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ராணுவ வீரர்களின் வாக்குகள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில்  தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கைத் தொடர்பில் லிம் கிட் சியாங் இவ்வாறு தெரிவித்தார். 14 ஆவது பொதுத் தேர்தலில் முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் அதிகார முறைக்கேடுகளில் மட்டும் ஈடுபடவில்லை. மாறாக ஜனநாயகத்திலும் முறைக்கேடுகளை நடத்தியுள்ளது என லிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தற்காப்பு அமைச்சு வெளியிடும் அறிக்கைகளை ஆராய்ந்தப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அசாஹார்  ஹரூண் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன