அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஆஸ்திரேலியா செல்வதற்காக கடப்பிதழை கோரும் வழக்கறிஞர் முகமட் ஷாபியின் மனு தள்ளுபடி
குற்றவியல்

ஆஸ்திரேலியா செல்வதற்காக கடப்பிதழை கோரும் வழக்கறிஞர் முகமட் ஷாபியின் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் மே 15-

வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு தமது கடப்பிதழை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் செய்துகொண்ட வழக்கறிஞர் முகமட் ஷாபியின் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

95 லட்சம் வெள்ளி தொடர்பான இரண்டு பண மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லாவின் கடப்பிதழ் ஏற்கனவே முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாத தொகுப்புகளை செவிமடுத்த பின்னர் முகமட் ஷாபியின் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி லாரன்ஸ் செக்குயிரா தள்ளுபடி செய்தார். வழக்கில் உதவுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் என்பதால் முடக்கப்பட்ட
தமது கடப்பிதழை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மே 13ஆம் தேதியிடப்பட்ட வழக்கு மனுவில் முகமட் ஷாபி கேட்டுக் கொண்டிருந்தார்.

மலேசியர் ஒருவர் எதிர்நோக்கியிருக்கும் போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் க மலாய் மொழிபெயர்ப்பு பணியை கொள்வதற்காக தாம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டியிருப்பதால் கடப்பிதழை ஒப்படைக்க வேண்டுமென ஷாபி அந்த மனுவில் கூறியிருந்தார்.

ஆனால் மொழிபெயர்ப்பு பணிக்காக தனது வழக்கறிஞர் நிறுவனத்தைச் சேர்ந்த வேறு வழக்கறிஞரை  அனுப்பி வைக்கலாம் என்பதால் ஷாபி அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி லாரன்ஸ் செக்குயிரா தீர்ப்பளித்தார்.

தாம் எதிர்நோக்கியிருக்கும் கடுமையான குற்றச்சாட்டின் காரணமாகவே முகமட் ஷாபி தமது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டதையும் நீதிபதி லாரன்ஸ் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிடமிருந்து சட்டவிரோதமாக 95 லட்சம் வெள்ளியைப் பெற்றதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை மறுத்து வழக்கறிஞர் முகமட் ஷாபி விசாரணை கோரியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன