அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > கடனை அங்கீகரிக்கும்படி நஜீப்பின் உத்தரவு ஓய்வூதிய நிதி குழும முதலீட்டு குறிப்பில் இடம்பெறவில்லை!
குற்றவியல்

கடனை அங்கீகரிக்கும்படி நஜீப்பின் உத்தரவு ஓய்வூதிய நிதி குழும முதலீட்டு குறிப்பில் இடம்பெறவில்லை!

கோலாலம்பூர் . மே 15-

எஸ். ஆர் .சி. இன்டர்நேஷனல் சென். பெர்ஹாட்டிற்கான கடன்களை அங்கீகரிக்கும்படி ஓய்வூதிய நிதி குழுமத்திற்கு டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் பிறப்பித்ததாக கூறப்படும் உத்தரவை அந்த நிதி நிறுவனத்தின் முதலீடு ஆய்வுக்குழு கூட்டத்தின் குறிப்பில் இடம்பெறவில்லை என கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

K.W.A.P எனப்படும் ஓய்வூதிய நிதி குழுமத்தின் சட்ட மற்றும் செயலக துறையின் உதவி தலைவர் அஸ்லின்டா மஸ்னி அர்ஷாட் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜிட் சிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனை ஒப்புக் கொண்டார்.

எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிதியில் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி முறைகேடு தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் லஞ்ச ஊழல் வழக்கு விசாரணை 17 வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. அப்போது நஜீப்பின் வழக்கறிஞரான ஹர்விந்தர்ஜிட் சிங் எழுப்பிய கேள்விக்கு அஸ்லின்டா பதிலளித்தார்.

2011ஆம் ஆண்டு எஸ்.ஆர் .சி இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட்டிற்கு 200 கோடி வெள்ளி கடனை உடனடியாக அங்கீகரிக்கும்படி ஓய்வூதிய நிதி குழுமத்திற்கு நஜீப் கேட்டுக்கொண்டதாக கடந்த வாரம் நீதிமன்றத்தில் அஸ்லின்டா கூறியிருந்தார்.

எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனலின் கடன் விண்ணப்பத்தை ஓய்வூதிய நிதி குழுமத்தின் நிரந்தர வருமானத் துறை பிரிவு நிராகரித்திருக்க முடியும் என்றும் என்றும் அஸ்லின்டா ஒப்புக்கொண்டார்.
கடன்களுக்காக விண்ணப்பம் செய்பவர்களின் மனுக்களை நாங்கள் நிராகரிக்க முடியும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அதோடு கடன் விண்ணப்பதாரரின் தகுதியையும் தாங்கள் ஆராய முடியும் என்பதோடு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அவர்களது வருமானம் குறித்த ஆற்றலையும் தமது துறை ஆராய முடியும் என்றும் அஸ்லின்டா தெரிவித்தார்.

எஸ் .ஆர் .சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு 2011ஆம் ஆண்டு 200 கோடி வெள்ளியையும் 800 கோடி வி கடனை ஓய்வூதிய நிதி குடும்பம் அங்கீகரித்தது அதன் பிறகு 2012ஆம் ஆண்டு மேலும் 200 கோடி வங்கிக் கடனையும் ஓய்வு ஊதிய நிதி குடும்பம் அங்கீகரித்தது.

எஸ் ஆர் சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு 2011ஆம் ஆண்டு 200 கோடி வெள்ளியையும் மற்றொரு 200 கோடி வெள்ளியை 2012ஆம் ஆண்டும் ஓய்வூதிய நிதி குழுமம் அங்கீகரித்ததாக இதற்கு முன் நீதிமன்றத்தில் கூறப்பட்டிருந்தது.

எஸ் ஆர் சி இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட்டிற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை நஜீப் எதிர்நோக்கியுள்ளார். வழக்கு விசாரணை தொடரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன