புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > கமலின் பேச்சுக்கு கண்டனங்கள்..!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

கமலின் பேச்சுக்கு கண்டனங்கள்..!

“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன் என்பதால், அக்கொலைக் குறித்து கேள்வி கேட்க வந்திருக்கின்றேன்” என்று, அண்மையில், தமிழகம், கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது நடிகர் கமல்ஹாசன் பேசிய பேச்சு தற்போது தமிழகத்தில் கடும் சர்ச்சையாக எழுந்திருக்கிறது.

சர்ச்சைக்குரிய வகையில் கமல் பேசியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்ப்புகள் வலுத்ததால் கமல் 2 நாட்களாக தமது பிரசாரங்களை ரத்து செய்திருக்கின்றார்.

இதனிடையே, கமலின் கருத்து தொடர்பாக கருத்துரைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, எந்த ஓர் இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது.அப்படி இருந்தால், அந்த நபர் இந்துவாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் கமலின் பேச்சு தொடர்பாக அவரின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. கமல் தவறாக பேசவில்லை. மாறாக, மத சகிப்புதன்மை வேண்டும் என்பதற்காக உதாரணங்களை காரணம் காட்டி கமல் பேசி இருப்பதாகவும் , அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் கமலின் இந்த கருத்துக்கள் முற்றிலும் மாற்றப்பட்டதுடன் தீய நோக்கத்துடன் அவரது பேச்சிற்கு இந்து விரோத சாயம் பூசப்பட்டு மக்களை குழப்பமடையச் செய்திருப்பதாக அந்த விளக்கத்தில் குறிப்பிடபட்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன