அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > நஜீப்பின் வங்கிக் கணக்கில் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி! ஏசான் பெர்டானா பரிமாற்றம் செய்தது
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நஜீப்பின் வங்கிக் கணக்கில் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி! ஏசான் பெர்டானா பரிமாற்றம் செய்தது

கோலாலம்பூர், மே 16-

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் இரு வங்கி கணக்குகளில் ஷாரிக்காட் ஏசான் பெர்டானா சென். பெர்ஹாட் (ஏசான் பெர்டானா) கோடிக்கணக்கான வெள்ளியை பரிமாற்றம் செய்தது.

அந்த இரு வங்கிக் கணக்குகளும் நஜீப்புக்கு சொந்தமானது என்பதை தெரியாமலேயே அவற்றில் கோடிக்கணக்கான வெள்ளியை பரிமாற்றம் செய்ததாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஏசான் பெர்டானாவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சம்சுல் அன்வார் சுலைமான் இதனைத் தெரிவித்தார்.

906 மற்றும் 880 என்று இறுதியில் முடிவடையும் அந்த வங்கிக் கணக்குகளில் தமது நிறுவனத்தில் இருந்து 3 தொகைகள் பரிமாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியதாகவும் டாக்டர் சம்சுல் கூறினார்.

2014 ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குமிடையே 2 கோடியே 70 லட்சம் வெள்ளி, 50 இலட்சம் வெள்ளி மற்றும் ஒரு கோடி வெள்ளி ஆகியவை இந்த பரிமாற்றத்தில் அடங்கும் என நீதிபதி முகமட் நஸ்லான் முன்னிலையில் டாக்டர் சம்சுல் தெரிவித்தார்.

அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினருமான டாக்டர் சம்சுல் ஒரே மலேசிய மக்கள் அறநிறுவனத்தின் நிர்வாக அதிகாரி உங் சூ லிங் உத்தரவுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன