அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதி சித்தி கரினா கொலை!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதி சித்தி கரினா கொலை!

கோலாலம்பூர் மே 16-

இம்மாதம் 8ஆம் தேதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதி சித்தி கரினா கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. கழுத்தில் காயங்களுடன்
சித்தி கரினாவின் அழுகிய நிலையிலான உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சைபர் ஜெயாவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன் அவர் மாண்டதாக நம்பப்படுகிறது .அவரது உடல் மருத்துவமனையின் தடயயியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

சித்தி கரினாவின் நெஞ்சு,கழுத்து மற்றும் தலை ஆகிய இடங்களில் காயங்கள் காணப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ நோர் அஸாம் ஜமாலுடின் கூறினார். ஆகக் கடைசியாக கடந்த புதன்கிழமையன்று செர்டாங் மருத்துவமனையின் கார் நிறுத்தும் பகுதியில் சித்தி கரிமா காணப்பட்டார்.

அடுக்குமாடி வீட்டின் பின்பகுதியில் உள்ள அறை ஒன்றில் காயங்களுடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து அவரது உடைகள், ஒரு கத்தி, மற்றும் ரத்த மாதிரி ஆகியவை ஆதாரங்களாக எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக நோர் அஸாம் சொன்னார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 2 நபர்களை கைது செய்தனர் இவர்களில் 25 வயதுடைய நைஜீரிய பெண் மற்றும் 38 வயதுடைய பாகிஸ்தான் ஆடவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு நைஜீரிய சந்தேகப்பேர்வழி தேடப்படுகிறார்.

40 வயதுடைய சித்தி கரிமா காணாமல் போவதற்கு முன் அவருடன் கைது செய்யப்பட்ட நபர்கள் ஆகக் கடைசியாக தொடர்பில் இருந்ததாகவும் டத்தோ நோர் அஸாம் ஜமாலுடின் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன