அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஐ.எஸ். தீவிரவாத மிரட்டல் பத்துமலை திருத்தலம் உட்பட 3 ஆலயங்களில் பாதுகாப்பு தீவிரம்
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாத மிரட்டல் பத்துமலை திருத்தலம் உட்பட 3 ஆலயங்களில் பாதுகாப்பு தீவிரம்

கோலாலம்பூர் 16-

சமய தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ள நான்கு சந்தேக பேர்வழிகள் கைது யசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பத்துமலை திருத்தலம் உட்பட கோலாலம்பூரில் மூன்று ஆலயங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், ஜாலான் துன் எச் எஸ் லீயில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான ஆலயம், ஜாலான் புடு உலுவில் உள்ள கோர்ட்டு மலை ஶ்ரீ கணேசர் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தீயணைப்பு வீரர் முகமது அடிப் முகமட் காசிம் மரணத்திற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கும் காரணங்களில் ஒன்று என தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள சந்தேகப் பேர்வழிகள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து வரலாற்றுப் வரலாற்றுப்பூர்வமான அந்த மூன்று ஆலயங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.

கடந்த ஆண்டு சீபில்ட் ஆலயத்தில் தீயணைப்பு வீரரின் துரதிஷ்டமான மரணத்திற்கு பழிவாங்குவதற்காக வழிபாட்டு தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தாக்கும் இலக்கை அந்த தீவிரவாதிகள் கொண்டிருப்பது குறித்து நாங்கள் கடுமையாக கருதுகிறோம் என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அந்த மூன்று ஆலயங்களிலும் 3 பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான செயல் திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் கொண்டுவரப்படும் பேக்குகள் அல்லது பைகள் அனைத்தும் பரிசோதிக்கப்படும். வருகையாளர்களும் விரிவாக கண்காணிக்கப்படுவர். சம்பந்தப்பட்ட இந்த மூன்று ஆலயங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என்றும் தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. பத்துமலை திருத்தலத்திற்கு தினசரி 3,000 சுற்றுப்பயணிகள் வருகை புரிகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன