அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > முதலில் நாம் அனைவரும் மனிதர்கள்! – டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

முதலில் நாம் அனைவரும் மனிதர்கள்! – டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன்

கோலாலம்பூர் மே 17-

பத்திரிக்கையாளர்கள் தோட்டத்தில் உள்ளவர்கள் போல் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்ட கருத்து ஏமாற்றத்தை அளிக்கிறது. தோட்டத்தில் பிறந்து வளர்ந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றா அல்லது அங்கீகரிக்க முடியாத ஒன்றா என கியூஐ குழுமத்தின் நிர்வாக தலைவர் விஜய் ஈஸ்வரன் வினவினார்.

இந்த அற்புதமான நாட்டில் குடிமக்களாக வளர்வதை தடுக்கப்பட்ட இடமாக தோட்டங்கள் உள்ளதா? இப்படி ஒரு முத்திரை ஏன்?  இனம், சமயம் அல்லது நிற அடிப்படையில் மக்களை குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது அவர்களுக்கு மன வலியை கொடுக்கக் கூடிய ஒன்று என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது என்றும் விஜய் ஈஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய முத்திரைகள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றை ய புதிய உலகத்தில் அமெரிக்கர்களும் கருப்பர்களாக குறிப்பிடப்படுகின்றனர். ஆதிக்க தரப்பைச் சேர்ந்த வெள்ளையர்கள் அரபு மற்றும் சீக்கியர்களை கூட துண்டு தலைகள் என முத்திரை குத்தினர். போர்க்காலத்தில் நாஜிக்களை எலிகள் என யூதர்கள் வர்ணித்தனர். மற்றொரு தனிப்பட்ட நபர்களை குறிப்பிட்ட முத்திரை அடைமொழியுடன் அழைத்தால் அது மோசமான தாக்கத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தும்.

ஒருவரின் இனம் ,ஆண் பெண் பாகுபாடு,சமூக பொருளாதார நிலை , அல்லது அவர்களது பூர்வீகம் ,அவர்கள் யார் என்பது அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்காது. அதோடு குறிப்பிட்ட இடத்தில் பிறந்ததால் அது எவருக்கும் எந்தவொரு அடையாளத்தையும் ஏற்படுத்தாது. குறிப்பிட்ட முத்திரை மற்றும் தவறான அபிப்ராயம் வெளிப்படையான பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இத்தகைய பாகுபாட்டிற்கு எதிராக நெல்சன் மண்டேலா , மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி போன்ற அற்புதமான தலைவர்கள் போராடியுள்ளனர். 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நமது காற்பந்து குழுக்களுக்கு நான் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து எனது உற்சாகத்தை வழங்கியிருக்கின்றேன்.

1975 ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியில் கலந்து கொண்ட நமது மலேசிய குழுவுக்கும் இதேபோன்று ஆதரவை வழங்கியிருக்கிறேன். மிஸ்புன் சிடேக் அவரது சகோதரர்கள்,ஆகக் கடைசியாக தேசிய பேட்மின்டன் விளையாட்டாளர் டத்தோ லீ சொங் வெய்க்கும் நாம் ஒட்டுமொத்த பாராட்டை தெரிவித்திருக்கிறோம்.

அவர்கள் எங்கு பிறந்தார்கள் அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை தாம் உட்பட யாரும் பொருட்படுத்தியதில்லை என்றும் விஜய் ஈஸ்வரன் சுட்டிக்காட்டினார். என்னைப் போல் அவர்களும் ஒரு மலேசியர் என்பதை மட்டுமே நான் கருதினேன் .மக்கள் மீது ஒரு முத்திரை குத்துவது மனித உணர்வை பிரதிபலிக்காது. நாம் அனைவரும் மனிதர்கள்.

முதலில் நம்மை மனிதர்கள் என்றும் பிறகுதான் நாம் மலேசியர்கள் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வோம். இதைத் தவிர இதர அனைத்து முத்திரைகளும் அல்லது அடையாளங்களும் மறைந்துவிடும். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை வைத்துத்தான் அடையாளம் காணப்படவீர்களே தவிர எங்கிருந்து வந்தீர்கள் என்பதை எவரும் பார்ப்பதில்லை.

நம்மை எது ஒற்றுமைப் படுத்துகிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர பிரிவினைப் படுத்தும் விவகாரங்களை பார்க்கக் கூடாது. இதுதான் புதிய மலேசியாவின் உண்மையான உணர்வை கொண்டதாக இருக்க முடியும் என டத்தோ ஸ்ரீ விஜய் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன