அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஆலய நிகழ்ச்சியில் துப்பாக்கி வேட்டு: நால்வர் விரைவில் கைதாகலாம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஆலய நிகழ்ச்சியில் துப்பாக்கி வேட்டு: நால்வர் விரைவில் கைதாகலாம்

கோலாலம்பூர் மே 17-

தஞ்ஞோங்காராங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி வெடி கிளப்பிய நபர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

30 மற்றும் 67 வயது டைய அந்த நான்கு சந்தேகப் பேர்வழி களும் அடையாளம் காணப்பட்டதாகவும் கூடிய விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத்துறை தலைவர் எஸ் .ஏ.சி. பாட்ஷீல் அகமட் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அடையாளம் காணப்பட்டது . அவற்றை போலீசார் பறிமுதல் செய்வார்கள் என அவர் தெரிவித்தார்.

1960ஆம் ஆண்டின் ஆயுத சட்டத்தின் 39வது விதியின் கீழ் இந்த சந்தேகப்பேர்வழிகளிடம் விசாரணை நடத்தப்படும் என வெளியிட்ட அறிக்கையில் பாட்ஷீல் அகமட் தெரிவித்தார்.

தஞ்ஞோங்காராங், சுங்கை பூரோங், பாரிட் 4இல் அமைந்துள்ள அந்த ஆலயத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது சுமார் இருபது துப்பாக்கி வேட்டுக்கள் ஆகாயத்தை நோக்கி பிரயோகிக்கப்பட்டன. ஒரு கும்பல் மேற்கொண்ட இந்த நடவடிக்கை குறித்த வீடியோ காணொளி காட்சி வெளியாகியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன