ரோன் 97 பெட்ரோல் விலை குறைந்தது!

கோலாலம்பூர் மே 17-

ரோன் 97 பெட்ரோல் விலை இரண்டு காசு குறைந்தது. அதேவேளையில் ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 70 காசிலிருந்து இரண்டு காசு குறைந்து தற்போது ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 68 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரோன் 95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 8 காசாகவும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 18காசாகவும் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தொடங்கி மே 24ஆம் தேதிவரை இந்த விலை அமலில் இருக்கும். நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றது.