அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் வழக்கு: 30 விழுக்காடு முடிந்துவிட்டது!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் வழக்கு: 30 விழுக்காடு முடிந்துவிட்டது!

கோலாலம்பூர் மே 17-

எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் சென் பெர்ஹாட்டின் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட நிதி முறைகேடு தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் மீதான வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 30 விழுக்காடு முழுமை அடைந்துவிட்டது.

அரசு தரப்பின் இதர 40 பேரின் சாட்சியங்களை நீதிமன்றம் செவிமடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு துணை வழக்கறிஞராக பணியாற்றும் டி.பி.பி டத்தோ வி. சிதம்பரம் இதனைத் தெரிவித்தார்.

18 நாள் நடைபெற்ற விசாரணையில் இதுவரை 37 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். மே 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கும் போது அவர்கள் தொடர்ந்து சாட்சியம் வழங்குவார்கள்.

ஃ 30 விழுக்காடு விசாரணை .முடிந்துவிட்ட நிலையில் மேலும் 39 நாட்களுக்கு இந்த வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

மே 28 மற்றும் மே 29தேதி, ஜூன் 10 முதல் 14 ஆம் தேதிவரை, பிறகு ஜூன் 17 முதல் 21ம் தேதி வரை அதனைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் 3 ஆம் தேதி வரை இறுதியாக ஜூலை எட்டாம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை இந்த வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமக்கு எதிரான 7 குற்றச்சாட்டுக்களையும் மறுத்து நஜீப் விசாரணை கோரியுள்ளார். அவரது சார்பில் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா ஆஜராகிறார். இந்த வழக்கு விசாரணையை தொடர்வதற்கான தேதியை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிர்ணயித்தது.

1எம்டிபி ஊழல் விவகாரத்தில் நம்பிக்கை மோசடி மீதான 3 குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நஜிப் எதிர்நோக்கியுள்ளார். எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை அவர் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன